venkat prabhuவெங்கட் பிரபு சென்னை-28 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதை தொடர்ந்து மங்காத்தா படத்தின் மூலம் மாஸ் இயக்குனர் என்ற இடத்திற்கு வந்தார்.

இந்நிலையில் இவர் அடுத்து சென்னை-28 இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார், இதே நேரத்தில் சரோஜா படத்தின் இரண்டாம் பாகமும் எடுக்கப்படவுள்ளதாம்.

ஆனால், இயக்குனர் இவர் இல்லை, வெங்கட் பிரபுவின் உதவி இயக்குனர் ஏ.ஜெ.ஸ்கந்த ப்ரியன் சரோஜா-2வை இயக்கவிருக்கின்றாராம். விரைவில் இதுக்குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என கூறப்படுகின்றது.