fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

100 கோடி வசூலுக்கு பின் கெத்து காட்டும் வெங்கட் பிரபு.. இத்தனை பேர் வாசலில் காத்து இருக்காங்களா!

venkat-prabhu-1

Tamil Cinema News | சினிமா செய்திகள்

100 கோடி வசூலுக்கு பின் கெத்து காட்டும் வெங்கட் பிரபு.. இத்தனை பேர் வாசலில் காத்து இருக்காங்களா!

குளுர்ல கெடந்தவனுக்கு கம்பளி கெடச்ச மாறி, ஒரே குஷியில் இருக்கிறார், இயக்குனர் வெங்கட்பிரபு. சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கி வேற லெவலில் ஹிட் கொடுத்தார். அந்த படம் வசூலையும் வாரிக் குவித்தது. இதனால் இன்று பிஸியாக இருக்கக்கூடிய இயக்குனர்கள் லிஸ்டில் வெங்கட்பிரபுவின் பெயரும் சேர்ந்து இருக்கிறது. மாநாடு படத்திற்கு பிறகு அடுத்து யாருடன் கூட்டணி அமைக்கலாம் என நாலாப்புறமும் அலசி ஆராய்ந்து வருகிறார் வெங்கட்பிரபு. இந்த நிலையில், மாநாடு படத்தின் வசூலை தொடர்ந்து, வெங்கட் பிரபு தான் இயங்கும் படங்களின், கலெக்சன் ஏரியாவில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார்.

அதனால் தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளையாக மாற ஆரம்பித்து இருக்கிறார் வெங்கட்பிரபு.இவர் ஒரு கதையை எழுதி அதை ஒரு தயாரிப்பாளர்களுக்கு போய் சொல்லி, அவருக்கு அந்த கதை பிடித்து அதன் பின் சூட்டிங் செல்ல வேண்டும் என்ற நிலை மாறி, இன்று வெங்கட்பிரபுவின் வீட்டைத் தேடி தயாரிப்பாளர்கள் குவியத் தொடங்கி இருக்கின்றனர். அந்த அளவிற்கு வெங்கட் பிரபுவின் மீது சினிமா துறைக்கு நம்பிக்கை வந்துவிட்டது.

ஆஹா இதாண்டா சான்சு என்று விஜய் சேதுபதி போல தாராள மனதோடு அத்தனைப் படங்களையும் இஷ்டத்திற்கு ஒப்புக் கொண்டு பின் நம் உயிரை வாங்காமல், மிகவும் பொறுமையாக முடிவெடுக்க இருக்கிறாராம். அந்த வரிசையில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப்படங்களை அளித்து வரும் AGS எண்டர்டெயின்மெண்டும் வெங்கட் பிரபுவிடம் அணுகி புதிய படம் ஒன்று குறித்து பேசி இருக்கிறது.

வெங்கட்பிரபுவும் அவர்களிடம் தன்னுடைய ஒரு கதையைச் சொல்லி இருக்கிறார். அதைக் கேட்ட AGS எண்டர்டெயின்மெண்டும், கதை சூப்பர் எப்போ சூட்டிங் என்று கேட்டு அட்வான்ஸ் தொகையையும் கையில் கொடுத்து விட்டு சென்று இருக்கிறார்களாம். சரி எல்லாம் ஓகே என்ன கதை..? யார் ஹீரோ..? படத்தில் நடிக்கப் போகும் ஹீரோயின் யார்..? என்ற பல கேள்விகள் சினிமா ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக ஒரு தகவலும் கசிந்து உள்ளது.இதுவரை அமையாத சூப்பர் கூட்டணி அமையப் போவதாக அந்த தகவலில் தெரிய வந்துள்ளது.

சமீபத்தில் வெளியான டாக்டர் படம் மூலம் 100 கோடி வசூல் செய்து விட்டு ஜம்முனு, டான் என அடுத்த படத்தில் பிஸியாக உள்ள சிவகார்த்திகேயன் தான் இந்தப் படத்தில் வெங்கட் பிரபுவோடு கை கோர்க்க இருக்கிறார். அதோடு மட்டுமில்லாமல் இந்தப் படத்திற்கு BGM கிங் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார் என்றவுடன் ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.

வெங்கட் பிரபு சமீபத்தில் பிட்டு பட ரேஞ்சுக்கு மன்மத லீலை படத்தின் அறிமுக டீசரை வெளியிட்டு அதிர வைத்தார். அதன் பின் இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் கிடைத்த இந்த வாய்ப்பை வெங்கட் பிரபு சரியாக பயன்படுத்திக் கொள்வார் என்றுதான் தெரிகிறது. வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் இருவரும் தொலைக்காட்சியில் சிவகார்த்திகேயன் பணி புரியும் போது, நல்ல நண்பர்களாக இருந்தனர் என்பது அனைவருக்கும் தெரியும்.

அதோடு சிவகார்த்திகேயனின் ஹீரோ மற்றும் கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த கூட்டணி எப்படி இருக்க போகிறது என ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

Continue Reading
To Top