கோட் ட்ரெய்லரில் இதை கவனிச்சீங்களா.! விஜய்யை பார்த்து பார்த்து செதுக்கிய VP

Vijay-GOAT: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் கோட் செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வருகிறது. அதற்கு முன்பாக படத்திலிருந்து வெளியான பாடல்கள் ரசிகர்களை கவர்ந்த நிலையில் மூன்றாம் பாடல் மட்டும் விமர்சனங்களை சந்தித்தது.

அதற்கு முக்கிய காரணம் விஜய்யை இளம் லுக்கில் காட்டுகிறேன் என முயற்சித்த ஏ ஐ சொதப்பியது தான். ஆனால் ட்ரெய்லரில் அப்படி எந்த அசம்பாவிதமும் நடந்து விடக்கூடாது என்பதற்காகவே ஒவ்வொன்றையும் வெங்கட் பிரபு பார்த்து பார்த்து செய்திருக்கிறார்.

அந்த வகையில் நேற்று வெளியான கோட் ட்ரெய்லர் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது. அதில் விஜய்யின் வித்தியாசமான கெட்டப் அனைத்துமே ரசிகர்களுக்கான மாஸ் ட்ரீட்டாக அமைந்துள்ளது.

விஜய்யின் கோட் டைட்டில் கார்டு

அதிலும் அந்த இளவயது லுக் மீண்டும் சரி செய்யப்பட்டு அச்சு அசல் விஜய் இளம் வயதில் எப்படி இருப்பாரோ அதை பிரதிபலிப்பது போல் இருந்தது. அவர் ஹீரோவாக அறிமுகமான நாளைய தீர்ப்பு படத்தில் அவருடைய லுக் இப்படித்தான் இருக்கும்.

goat-vijay
goat-vijay

அதையும் கோட் படத்தில் இருக்கும் இள வயது விஜயின் போட்டோவையும் இணைத்து ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். இந்த முயற்சி சிறப்பாக இருப்பதாகவும் வெங்கட் பிரபு வேற லெவலில் சம்பவம் செய்துவிட்டார் எனவும் பாராட்டி வருகின்றனர்.

அதே சமயம் கோட் ட்ரெய்லரில் டைட்டில் கார்டு சீன் ஒன்று அசத்தலாக வெளியாகி இருந்தது. அதில் விஜயின் நாளைய தீர்ப்பு படத்தில் ஆரம்பித்து காதலுக்கு மரியாதை, பத்ரி, போக்கிரி, பிகில், மாஸ்டர், லியோ என ஒவ்வொரு கெட்டப்பும் காட்டப்பட்டது.

கிட்டத்தட்ட 16 விஜய் படங்களின் தோற்றம் அதில் காட்டப்பட்டது. அதுதான் டைட்டில் கார்டாகவும் வர இருக்கிறது. இதை தற்போது கொண்டாடி வரும் ரசிகர்கள் படம் வெளிவந்த பிறகு தியேட்டரில் இந்த சீன் வேற லெவலில் இருக்கும் என ஆரவாரம் செய்து வருகின்றனர்.

கோட் ட்ரெய்லரில் சம்பவம் செய்த வெங்கட் பிரபு

Next Story

- Advertisement -