Connect with us

Cinemapettai

வெங்கட் பிரபு ஹீரோவாக நடித்த படம் பற்றி தெரியுமா? பிரபல நடிகையுடன் வெளிவந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்

venkat-prabhu

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வெங்கட் பிரபு ஹீரோவாக நடித்த படம் பற்றி தெரியுமா? பிரபல நடிகையுடன் வெளிவந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்

வெங்கட்பிரபுவை பலருக்கும் குணச்சித்திர நடிகர் மற்றும் இயக்குனராக தான் தெரியும். ஆனால் அவர் ஹீரோவாக ஒரு படத்தில் நடித்தார் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.

பிரபல இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன்தான் வெங்கட் பிரபு. ஆரம்பத்தில் சினிமாவில் நடிகராக பல முயற்சிகள் செய்தார்.

விஜய்யுடன் சிவகாசி, அஜித்துடன் ஜி போன்ற படங்களில் வெங்கட் பிரபு நடித்துள்ள காட்சிகளை பார்க்க முடியும்.

ஒரு கட்டத்தில் குணச்சித்திர நடிகர்களில் இருந்து இயக்குனராக அவதாரம் எடுத்த வெங்கட்பிரபு தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.

ஆனால் அவர் ஹீரோவாக நடித்த படம் ஒன்று தற்போது வரை வெளியாகாமல் இருப்பது தெரியவந்துள்ளது.

வெங்கட் பிரபு மற்றும் சங்கீதா நடிப்பில் இளையராஜா இசையில் கங்கை அமரன் இயக்கத்தில் உருவான திரைப்படம் பூஞ்சோலை.

venkat-prabhu-cinemapettai

venkat-prabhu-cinemapettai

ஆனால் இந்த படம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் கடைசி வரை வெங்கட் பிரபு ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமாக முடியவில்லை. இந்நிலையில் இந்த படத்தின் போஸ்டர்கள் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.

venkat-prabhu-cinemapettai-01

venkat-prabhu-cinemapettai-01

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top