பழைய ரூட்டை கையில் எடுக்கும் வெங்கட் பிரபு.. சிவகார்த்திகேயன் மீது நம்பிக்கை இல்லாமல் எடுத்த முடிவு

Venkat Prabhu: வெங்கட் பிரபு இப்போது கோட் படத்தை எடுத்த நிலையில் அந்த படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படம் வெளியான 4 நாட்களில் கிட்டத்தட்ட 300 கோடி வசூலை பெற்றிருக்கிறது. தொடர்ந்து ஊடகங்களுக்கு வெங்கட் பிரபு கோட் வெற்றி குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் அடுத்ததாக வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனின் படத்தை எடுக்குவதாக தகவல் வெளியானது. ஆனால் சிவகார்த்திகேயன் கைவசம் இப்போது எக்கச்சக்க படங்கள் இருக்கிறது. ஒருபுறம் கமல் தயாரிப்பில் அமரன் படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பும் பிசியாக போய்க்கொண்டிருக்கிறது. இன்னும் சில படங்களில் சிவகார்த்திகேயன் கமிட்டாகி உள்ளதால் வெங்கட் பிரபு படத்தில் நடிக்க கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாகும்.

சிவகார்த்திகேயன் மீது நம்பிக்கை இல்லாமல் வந்த வெங்கட்பிரபு எடுத்த முடிவு

ஒருவேளை அதன் பிறகு சிவகார்த்திகேயன் தன்னுடைய படத்தில் நடிக்காமல் போய்விட்டால் என்ன பண்ணுவது என்று வெங்கட் பிரபு வேறு ஒரு திட்டம் தீட்டி இருக்கிறார். சிவகார்த்திகேயன் தன்னுடைய படங்களை முடித்து வர வரைக்கும் அடுத்த ஸ்கிரிப்ட் தயார் செய்ய உள்ளாராம்.

அதாவது வெங்கட் பிரபு தனது பழைய ரூட்டை கையில் எடுக்க உள்ளார். சென்னை 600028 வெங்கட் பிரபுவுக்கு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுத்து வெற்றி கண்டார். அதேபோல் அவரது படங்களில் கிரிக்கெட் காட்சி வைத்தால் அது ஹிட் அடித்து விடுகிறது.

கோட் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கூட வெங்கட் பிரபு ஒரு பிரம்மாண்டமான கிரிக்கெட் மேட்ச் நடப்பது போல காட்சி அமைத்திருந்தார். தோனியும் கேமியோ தோற்றத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சென்னை 600028 படத்தில் மூன்றாம் பாகத்திற்கான கதையை வெங்கட் பிரபு தயார் செய்து வருகிறார்.

கோட்டில் வெற்றி கண்ட வெங்கட் பிரபு

- Advertisement -spot_img

Trending News