GOAT: வாயுள்ள புள்ள பொழச்சிக்கும்னு சொல்லுவாங்க. அந்த ரகத்தை சேர்ந்தவர் தான் இயக்குனர் வெங்கட் பிரபு. புதுமுக இளைஞர்களை வைத்து கிரிக்கெட் மையமாகக் கொண்டு சென்னை 28 படத்தை இயக்கிய வெங்கட் பிரபு அஜித் மற்றும் விஜய்யை இயக்கிய இயக்குனர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகி இருக்கிறார்.
நடிகர் அஜித்குமாரின் 50 ஆவது படமான மங்காத்தா படத்தை இயக்கிய அவருடைய சினிமா கேரியரில் பெரிய பிளாக்பஸ்டர் படம் ஆக்கினார். விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய கோட் படம் இன்று ரிலீஸ் ஆகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றிருக்கிறது.
ஒரு நடிகர் நடிக்கும் படத்தை அவருடைய ரசிகர்கள் பார்ப்பது என்பது பழக்கமான விஷயம் தான். ஆனால் அந்த நடிகரை காலம் முழுக்க ட்ரோல் செய்தவர்களை படம் பார்க்க வைப்பதெல்லாம் பெரிய விஷயம் தான். அஜித் மற்றும் விஜய் இருவரும் சமகாலத்து போட்டியாளர்கள்.
ராஜதந்திரம்ன்னா இப்படி இருக்கணும்!
இவர்களுடைய ரசிகர்களுக்குள் எப்போதுமே போட்டி தான் நடந்து கொண்டிருக்கும். அதிலும் வெங்கட் பிரபு அஜித் பட இயக்குனர் என முத்திரை குத்தப்பட்டவர். இந்த முத்திரையிலிருந்து விலகி விஜய் வைத்து படம் பண்ணும் போதே வெங்கட் பிரபு அஜித் ரசிகர்களுக்கு கொக்கி போட்டு விட்டார்.
கோட் படத்தை பற்றி பேசும் இடங்களில் எல்லாம் வெங்கட் பிரபு எப்போதுமே அஜித்தை பற்றி தான் பேசுவார். அது மட்டுமில்லாமல் கோட் படத்தின் கதை அஜித்துக்கு தெரியும், அவர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார் என தொடர்ந்து அஜித்தை இந்த கதைக்குள் தக்க வைத்துக் கொண்டே இருந்தார்.
அது மட்டும் இல்லாமல் ரிலீஸுக்கு முந்தைய நாள் விஜய் உடன் அஜித் பைக்கில் பயணிப்பது போல் ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட போஸ்டரை வெளியிட்டது தயாரிப்பு குழு. நேற்று இரவு கோட் படத்திற்கும், விஜய்க்கும் முதன் முதலில் வாழ்த்து சொன்ன அஜித்திற்கு நன்றி என ஒரு பதிவை போட்டார்.
கோட் படம் தொடங்கியதில் இருந்து ரிலீஸ் வரை அஜித்தை இந்த கதைக்குள் சம்பந்தப்படுத்தி, அஜித் ரசிகர்களை இந்த படத்தை பார்க்கும் அளவுக்கு வெங்கட் பிரபு தூண்டி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
கோட் படத்தில் இருக்கும் லாஜிக் சொதப்பல்
- வொர்க் அவுட் ஆனதா விஜய், வெங்கட் பிரபுவின் மேஜிக்.?
- வாயை பிளக்க வைத்த GOAT டிஜிட்டல், தியேட்டர் உரிமை விற்பனை
- வெங்கட் பிரபு அண்ட் கோ கொடுத்த அலப்பறை