இதற்கு முன்பு சில படங்களில் டியூன்களுக்கு ரசிகர்களை பாடல் எழுத வைத்து, அதில் சிறப்பாக எழுதியவரை பாடலாசிரியராக்கினார்கள். அதேபோல் தற்போது வெங்கட்பிரபு இயக்கியுள்ள சென்னை-28 பார்ட்-2 படத்திலும் ரசிகர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

அதாவது, இந்த படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள தி பாய்ஸ் ஆர் பேக் -என்ற பாடல் வெளியாகியுள்ள நிலையில், அந்த பாடலுக்கு பொருத்தமான விசுவலை படமாக்கி அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். அப்படி எடுத்து அனுப்பும் விசுவல் ஷாட்டில் அந்த பாடலுக்கு பொருத்தமாக இருப்பதை பயன்படுத்திக்கொள்ளப்போகிறார்களாம்.

அதோடு அவர்களின் பெயரும் படத்தில் இடம்பெறுமாம். இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து ஏராளமான இளவட்ட கேமராமேன்கள் அந்த பாடலுக்கு பொருத்தமான காட்சிகளை படமாக்கி அனுப்பி வருகிறார்களாம்.