Tamil Cinema News | சினிமா செய்திகள்
வைபவ் – வெங்கட் பிரபு மோதும் ‘லாக் அப்’.. இது போலீஸ் ஆட்டம்! பர்ஸ்ட் லுக் வெளியானது
வெங்கட் பிரபு அண்ட் க்ரூப் என்று சொல்லும் அளவுக்கு ஒரு பெரிய வட்டாரமே உள்ளது உருவாகியுள்ளது நம் கோலிவுட்டில். அதில் ஒருவரான நிதின் சத்யா சில மாதங்களுக்கு முன் ஜெய் அவர்களை ஹீரோவாக்கி ஜருகண்டி’ படத்தை தயாரித்து இருந்தார் அந்த படத்திற்கு பிறகு ‘லாக்கப்’ படத்தை தயாரித்து வருகிறார்.
இப்படத்தில் வைபவ், வெங்கட் பிரபு (வில்லன்) இருவரும் போலீசாக நடிக்கின்றனர். சின்னத்திரை மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான வாணி போஜன் ஹீரோயின். பூர்ணா, ஈஸ்வரி ராவ் முக்கியமான ரோலக்களில் நடிக்கின்றனர். எஸ்.ஜி.சார்லஸ் இயக்கியுள்ள இப்படத்திற்கு இசை ஆரோலி கொரலி.
நேற்று இயக்குனர் மோகன் ராஜா டைட்டில் லுக் போஸ்டர் வெளியிட்டார். இன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
Happy to Share the First Look Poster of #Lockup best wishes. God bless
Congrats to @actor_vaibhav @Nitinsathyaa @SGCharles2
@shvedhgroup @vp_offl @vanibhojanoffl @shamna_kasim #EswariRao @ArrolCorelli @editor_mad @teamaimpr @kbsriram16 pic.twitter.com/hpdkQy1nuy— Dhanush (@dhanushkraja) November 1, 2019
