Videos | வீடியோக்கள்
தமிழில் கல்லா கட்டுமா? வெங்கட் பிரபு, நாக சைத்தன்யா கூட்டணி.. கஸ்டடி டீசர் எப்படி இருக்கு.?
வெங்கட் பிரபு மற்றும் நாக சைத்தன்யா கூட்டணியில் கஸ்டடி படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.
நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் கவனம் பெற்ற வெங்கட் பிரபு மாநாடு திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தார். அதைத்தொடர்ந்து அவர் இயக்கத்தில் மன்மத லீலை திரைப்படம் வெளிவந்தது. பிட்டு படம் ரேஞ்சுக்கு இருந்த அப்படத்தை தொடர்ந்து அவர் தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை இயக்குவதற்காக அக்கட தேசம் சென்றார்.
பல மாதங்களாக விறுவிறுப்பாக படமாக்கப்பட்ட அந்த திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. அந்த வகையில் கஸ்டடி என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்ஸ்கிரீன் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் கீர்த்தி செட்டி, அரவிந்த்சாமி, ப்ரியாமணி, சரத்குமார், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
Also read: சிம்புவின் சினிமா கேரியரை க்ளோஸ் பண்ண 5 படங்கள்.. மீண்டும் வாழ்வு கொடுத்த வெங்கட் பிரபு
இதுவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் டீசர் எந்த அளவிற்கு ரசிகர்களை கவர்ந்துள்ளது என்பதை இங்கு காண்போம். டீசரின் ஆரம்பமே காயம் பட்ட மனசு ஒருத்தன எந்த லெவலுக்கு வேண்டுமானாலும் கொண்டு போகும் என்ற வாசகத்தோடு ஆரம்பிக்கிறது. அதைத்தொடர்ந்து சஸ்பென்ஸ் உடன் பல காட்சிகள் விரிகிறது.
அதில் நாகை சைத்தன்யா போலீஸாக அதிரடி ஆக்சன் காட்சிகளில் கலக்கியுள்ளார். மேலும் டான் போன்று இருக்கும் அரவிந்த்சாமி, கோட் சூட்டில் வரும் சரத்குமார் என ஒவ்வொருவரின் கதாபாத்திரமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பின்னணி இசையும், அனல் பறக்கும் விசுவல் காட்சிகளும் என டீசர் படு மிரட்டலாக இருக்கிறது.
Also read: 2022-ல் அசோக் செல்வன் கொடுத்த 5 தோல்வி படங்கள்.. மொத்தமாக ஊத்தி முடிய வெங்கட் பிரபுவின் மன்மத லீலை
அந்த வகையில் இது தெலுங்கு ரசிகர்களுக்கான செமையான ட்ரீட் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இந்த திரைப்படம் தமிழ் ஆடியன்ஸை எந்த அளவுக்கு கவரும் என்பது படம் வெளிவந்தால் தான் தெரியும். தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் வரும் மே 12ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தின் டீசர் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
