Connect with us

Cinemapettai

பேட்ட vs விஸ்வாசம் கிடையாதுங்க. வைரலாகுது இயக்குனர் வெங்கட் பிரபுவின் உருக்கமான பதிவு.

Cinema News | சினிமா செய்திகள்

பேட்ட vs விஸ்வாசம் கிடையாதுங்க. வைரலாகுது இயக்குனர் வெங்கட் பிரபுவின் உருக்கமான பதிவு.

பேட்ட vs விஸ்வாசம்

தல , தலைவர் பொங்கல் என்றே பேசப்பட்டது ஆரம்பம் முதலே. தல தலைவர் சாமானிய ரசிகனுக்கே இருவரையுமே பிடிக்கும். இரண்டு நடிகர்களும், சினிமா துறையில் யாரையும் போட்டி எனவும் எதிரி எனவும் நினைக்காதவர்கள் என்பதும் நாம் அறிந்த விஷயமே. தமிழகத்தில் நிறைய தியேட்டர்கள் இருப்பதால் இரண்டு படங்களுக்குமே நல்ல ஓப்பனிங் கிடைத்தது.

இந்நிலையில் ஆரம்பம் முதலே ட்விட்டரில் இரண்டு தயாரிப்பு நிறுவனத்திற்கும் போட்டி நிலவியது. பின்னர் மரண மாஸ் பேட்ட vs கொல மாஸ் விஸ்வாசம் என்ற போட்டி வேறு. இறுதியில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் என பல விஷயங்கள். ரசிகர்கள், திரை அரங்க நிர்வாகிகள், விநியோகிஸ்தர்கள் என பல கருத்துக்கள் நிலவியது.

viswasam-petta

viswasam-petta

இந்நிலையில் தன் ட்விட்டரில் வெங்கட் பிரபு பின்வருமாறு பதிவிட்டுள்ளார். “இது பேட்ட vs விஸ்வாசம் கிடையாது. பேட்ட மற்றும் விஸ்வாசம். தல, தலைவர் ரசிகர்கள் இரண்டு படங்களையும் கொண்டாடுங்கள். அன்பை பரப்புங்கள், வெறுப்பை அல்ல. இது போன்ற ஒப்பீடை பார்க்கும் பொழுது சங்கடமாக உள்ளது. ஆக மொத்தத்தில் இந்த ஆண்டு தமிழ் சினிமாவுக்கு நல்ல துவக்கமாக அமைந்துள்ளது. இரண்டு படக்குழுவுக்கு, ரசிகர்களுக்கும் நன்றி” என அவர் பதிவிட்டுள்ளார்.

இந்த ட்வீட் 1500 ரிட்வீட் மற்றும் 8300 லைக் பெற்றுள்ளது. முன்னணி இயக்குனர் ஒருவர் இது போல சமரசம் செய்யும் விதமாக கருத்து பதிவிட்டது, பலரின் பாராட்டை பெற்றுள்ளது.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

ஆகமொத்தத்தில் நாம் நம் தளத்தில் முன்பே பதிவிட்டது போல
பேட்ட, இல்ல விஸ்வாசம் யார் ஜெயித்தார் என்பதை விட, தமிழ் சினிமா இங்கு வென்றதே நமக்கு மகிழ்ச்சி.

ஆக மொத்தத்தில் சினிமா ரசிகர்களுக்கும், அதனை நம்பி இருக்கும் அனைவரின் பேட்டையிலும் இது விஸ்வாசமான பொங்கல் தான்.

ராமன் ஜெயிச்சாலும் ராவணன் ஜெயிச்சாலும் எனக்கு ஒரு கவலை இல்லை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top