அட இவர் யாருப்பா? விவேகம் வசூல் பற்றி புது கதை சொல்றார்..

தமிழ்சினிமாவில் முக்கிய சினிமாக்கள் உருவாக காரணமாக இருந்தவர்… முன்னணி ஹீரோக்கள் சிலருக்கு மேனேஜர்… திரையுலக தட்ப வெப்பங்களை அறிந்தவர் வெங்கட்!

விவேகம் .. விஷால் சட்டப்படி ஐந்து நாட்களுக்கு பின் வெங்கட் கருத்து.

எத்தனையோ படங்களுக்கு எழுதவில்லை. அந்த வரிசையில் இந்த படத்தையும் விட்டு விடலாம் என நினைத்தேன் … ஆனால் … மனசு பொறுக்கலையே..

உழைத்தவர்கள் ஊதியம் பெற்று அடுத்த வேலைக்கு போயாச்சு…

தயாரித்தவர் வியாபாரம் முடிச்சாச்சு…

வாங்கிய வியாபாரிகள் சிலருக்கு பாகுபலி. பலர் நிலை மகாபலி.

ரசிகர்களுக்கு சற்று தர்ம சங்கடம்.

வெறியர்களால் பலருக்கு செம்ம சங்கடம்

உலக வியாபாரம் குறித்த பல உண்மைகள் மறைக்கப்படுகிறது என்கிற நிலையில் தமிழ்நாட்டில் fulla கல்லா கட்ட முடியாதபோது உலகத்தரம் என்கிற பெயரில் அயல் நாட்டில் அதிக செலவு செய்யலாமா தயாரிப்பாளரே?

ajith
அதே போல, உங்களை நம்பி வினியோகஸ்தர்கள் கொட்டிய முதலீட்டையும் ரசிகர்கள் செய்த செலவையும் சம்மந்தப்பட்டவர்கள் மதிக்க வேண்டும்.

வித்தியாசமாக என்ற பெயரில் விபரீத செலவு செய்வது விவேகமல்ல..

காரணம் நஷ்டப்படுவது ஆசைப்பட்டு காசை இழப்பது முட்டாள் முதலீட்டாளர்களே தவிர, நடிகர்களும் தொழில் நுட்பக்கலைஞர்களும் தொழிலாளர்களும் நிதியாளர்களும் அல்ல.

எத்தனை பூச்சு பூசினாலும் எகிறி எகிறி குதித்தாலும் சரி..

உண்மையை உரக்க சொல்கிறேன்….

விவேகம் படம் வணிக ரீதியாக பலருக்கு நஷ்டமே..

Comments

comments