Connect with us
Cinemapettai

Cinemapettai

அழுக்குப் படிந்த பனியன் லுங்கியுடன் சிலருக்கு நடுவில் சிம்பு.. கலக்கும் வெந்து தணிந்தது காடு செகண்ட் லுக் போஸ்டர்

simbu-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அழுக்குப் படிந்த பனியன் லுங்கியுடன் சிலருக்கு நடுவில் சிம்பு.. கலக்கும் வெந்து தணிந்தது காடு செகண்ட் லுக் போஸ்டர்

திரைப்படத்திற்காக நடிகர்களின் கடின உழைப்பை ரசிகர்கள் எப்போதும் பாராட்டுவார்கள். ஒவ்வொரு திரைப்படத்திலும் ரசிகர்களின் கடின உழைப்பு இருக்கும். அதில் உடல் அமைப்பை மாற்றுவது மிகவும் முக்கியமானதாக உள்ளது.

இந்த வகையில் தற்போது சிம்புவின் புகைப்படம் தான் இணையதளத்தில் வைரலாகி வருகிறது எப்படி இருந்த சிம்பு திரைப்படத்திற்காக இப்படி உடலை வருத்தி இருக்கிறார் என்று வியந்துள்ளனர் ரசிகர்கள்.

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் உருவாகும் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் சிம்பு 18 வயது சிறுவன் போல தோற்றமளிக்கிறார். இது சிம்புவின் நாற்பத்து ஏழாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா இந்த திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக கௌதம் மேனனுடன் கைகோர்க்கிறார் சிம்பு.

வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு முன்னால் ஏகப்பட்ட பஞ்சாயத்துகள் வெளிவந்த நிலையில் அந்த படத்தின் தயாரிப்பாளர் சிம்புவின் அனைத்து கடன்களையும் ஏற்றுக் கொண்டதால் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கிவிட்டது.

மேலும் சிம்பு நடிப்பதற்காக போடப்பட்ட தடையும் நீக்கப்பட்டது. அதனை கொண்டாடும் வகையில் வெந்து தணிந்தது காடு படத்தில் செகண்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

vendu-thaninthathu-kaadu-cinemapettai

vendu-thaninthathu-kaadu-cinemapettai

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top