வெந்து தணிந்தது காடு படத்தின் கதை.. இது ரொம்ப பழைய ஸ்கிரிப்ட் போல

சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் ரசிகர்கள் நல்ல வரவேற்பு பெற்றது. அதன் பிறகு சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தற்போது பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார்.

சிம்பு நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படம் உருவாகிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ள நிலையில், வரும் ஜூன் மாதம் படம் வெளியாகும் என ட்விட்டர் பக்கத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் முழுக்கதையும் தற்போது லீக் ஆகி உள்ளது. அதாவது கிராமத்து இளைஞனாக சிம்பு ஊர்களில் கூலி வேலை செய்கிறார். அவருக்கு போதிய வருமானம் கிடைப்பதில்லை.

அதனால் தனது அம்மா மற்றும் தங்கையை காப்பாற்றும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார். அதற்காக மும்பைக்கு வேலை செய்கிறார். அப்போது அவருக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் உருவாகிறது. அதனை எப்படி சமாளித்து தன்னை ஒரு ஹீரோவாக காட்டுகிறார் என்பதுதான் படத்தின் மீதி கதை என தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது வெந்து தணிந்தது காடு படத்தின் கதையைப் பார்த்தால் பழைய ஸ்கிரிப்ட் போல இருந்தாலும் சிம்புவின் நடிப்பை பார்ப்பதற்காகவே இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

மேலும் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக வெந்து தணிந்தது காடு படத்தின் மூலமாக கௌதம் வாசுதேவ் மேனன்-ஏஆர் ரகுமான்- சிம்பு உடைய கூட்டணியில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை குறித்து ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்