fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

அதிக பார்வையாளர்களை கொண்ட வெந்து தணிந்தது காடு டீசர்.. கொண்டாட்டத்தில் சிம்பு

simbu-gautham-menon

Videos | வீடியோக்கள்

அதிக பார்வையாளர்களை கொண்ட வெந்து தணிந்தது காடு டீசர்.. கொண்டாட்டத்தில் சிம்பு

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. மாநாடு திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு சிம்புவின் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமாக இது உள்ளது.

இதன் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி உள்ள நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சிம்பு, முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த டீசர் முழுவதும் சிம்புவின் கதாபாத்திரத்தை மையப்படுத்தி வெளியாகியுள்ளது.

இந்த டீசர் சுமார் 1.35 நிமிடங்களுக்கு ஓடுகிறது. அந்த நேரம் முழுவதும் நம்மால் கண்களை வேறு எங்கும் திருப்ப முடியாத அளவுக்கு மிகவும் சுவாரசியமாக உள்ளது. மேலும் ஏஆர் ரகுமானின் பின்னணி குரல் மிகவும் அற்புதமாக ஒலிக்கிறது.

இப்படம் ஒரு சுவாரசியமான, ஆக்ஷன் படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அந்த அளவுக்கு டீசர் மிரட்டலாக வெளிவந்திருக்கிறது. இதில் சிம்பு இருபதுகளின் தொடக்கத்தில் இருக்கும் இளைஞர் போன்ற தோற்றத்தில் இருக்கிறார்.

இதுவரை சிம்பு நடித்து வெளியான படங்களிலேயே இது மிகவும் வித்தியாசமான முயற்சியாக இருக்கும். மேலும் இந்த படத்தில் சிம்புவின் நடிப்பபை வேறொரு பரிமாணத்தில் நாம் காணலாம். தற்போது மாநாடு படம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வசூலை வாரி குவித்து வருகிறது.

அதேபோல் வெந்து தணிந்தது காடு திரைப்படமும் வசூலில் சாதனை செய்யும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்த டீசர் வெளியான சில நிமிடங்களிலேயே 2 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து சாதனை புரிந்துள்ளது.

மேலும் இந்த டீசர் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த மகிழ்ச்சியை சிம்புவின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading

More in Videos | வீடியோக்கள்

அதிகம் படித்தவை

To Top