கனவிலேயே கோட்டை கட்டும் வெண்பா.. பாரதியிடம் கிடைக்கும் டிஎன்ஏ ரிப்போர்ட்

விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியலில் வெண்பாவை திருமணம் செய்து கொள்வேன் என வாக்குக் கொடுத்த பிறகு பாரதிக்கு, அவருடைய குழந்தைகளுக்கும் அவருக்கும் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கும் ஞானோதயம் வந்திருக்கிறது.

இதற்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்து கடைசியில் டெஸ்ட் ரிப்போர்ட் வருவதற்காக ஒவ்வொரு நாளும் கத்தி மேல் நிற்பது போல் காத்துக்கொண்டிருக்கிறார். மேலும் வெண்பாவிற்கு நாளை திருமணம் என்பதால் முகூர்த்த நேரத்திற்கு முன்பே வெண்பா கல்யாண மண்டபத்தில் இருந்து தப்பித்து பாரதியைத் திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்தில் இருக்கிறார்.

Also Read: அதல பாதாளத்திற்கு சென்ற பிக்பாஸ் டிஆர்பி.. போட்டியாளரிடம் கெஞ்சும் விஜய் டிவி

ஆனால் அதற்கு முன்பே டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட் கையில் கிடைத்த பிறகு அதை வைத்துதான் வெண்பாவை ஏற்றுக் கொள்ளலாமா வேண்டாமா என்ற முடிவை பாரதி எடுக்க இருக்கிறார். எனவே நாளை பாரதி கையில் கிடைக்கும் டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டில் அவருடைய பிள்ளைகள் அவருக்கு பிறந்து தான் என்பதை தெரிந்து கண்ணம்மாவிடம் தலைகுனிந்து நிற்கப் போகிறார்

மேலும் பத்து வருடங்களாக கண்ணம்மாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு தன்னுடைய பிள்ளைகளையும் பிரிந்து வாழ்ந்த குற்ற உணர்ச்சியுடன் பாரதி, கண்ணம்மாவிடம் சென்று மன்னிப்பு கேட்கிறார். ஆனால் அப்போது கூட வெண்பா தன்னுடைய வயிற்றில் வளர்ந்த வளரும் குழந்தைக்கும் பாரதிதான் அப்பா என்று மறுபடியும் குட்டையை கலக்குகிறார்.

Also Read: விவாகரத்து பெற்று தனியாக வாழும் விஜய் டிவியின் 5 பிரபலங்கள்.. ஒரு வருடம் கூட தாக்கு பிடிக்காத டிடி

ஆனால் அந்த நேரத்தில் ரோகித் வந்து வெண்பா கட்டிய கோட்டையை சுக்குநூறாக உடைத்தெறிகிறார். வெண்பாவின் வயிற்றில் வளரும் குழந்தை தன்னுடையது என்றும் வெண்பாவிற்கு அவருக்கும் ஹோட்டலில் நடந்த தவறை விளக்கி சொல்லி, பாரதியை கண்ணம்மாவுடன் ரோகித் சேர்த்துவைக்க துணையாக நிற்பார்.

இப்படி கிளைமாக்ஸ் காட்சிகளை நோக்கி சென்று கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா சீரியலுக்கு சீக்கிரம் எண்டு கார்டு போடா போகின்றனர். இந்த சீரியலின் இரண்டாம் பாகமும் விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: பத்த வச்ச கண்ணம்மா.. பற்றி எரியும் வெண்பா வீடு