விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாரதி கண்ணம்மா’ என்ற சீரியலில், வெண்பா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடிக்கும் நடிகைதான் பரீனா. இவர் சின்னத்திரையில் தொடக்கத்தில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, அதன் பின் முன்னணி சீரியல்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவர் திருமணமாகி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால்,
அவ்வபோது போட்டோ ஷூட்களை நடத்தி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அத்துடன் தனது வயிற்றுப் பகுதியில் மெஹந்தி போட்டிருக்கும் புகைப்படத்தையும் பரீனா பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் பெரும்பாலும் தனது வயிற்றுப்பகுதியை காண்பித்து எடுப்பதால்,
ரசிகர்கள் பலர், ‘நிறைமாத வயிற்றை காண்பித்தபடி புகைப்படம் எடுக்காதீர்கள். அது குழந்தைக்கு ஆபத்தானது. மேலும் வயிற்றைப் பார்த்து கண்ணு வைத்திருவார்கள்’ என்று பரீனாவின் ரசிகர்கள் தங்கள் கமெண்ட்டுகள் மூலம் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.
சோஷியல் மீடியாவில் ரொம்பவும் ஆக்டிவாக இருக்கும் பரீனா, ரசிகர்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் உடனுக்குடன் பதில் அளிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இதன் காரணமாகவே பரீனாவிற்கு எக்கச்சக்கமான ரசிகர் கூட்டம் உள்ளது.