Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கண்ணம்மா சோலி முடிந்தது.. பாரதியுடன் திருமணக்கோலத்தில் வெண்பா அடிக்கும் லூட்டி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா தொடர் தற்போது அதிரடி திருப்பங்களுடன் அரங்கேறி வருகிறது. அதாவது வெண்பாவின் அம்மா ஷர்மிளா வெண்பாவிற்கு நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்துள்ளார். அதில் பாரதி மற்றும் பாரதி குடும்பத்தினர் கலந்து கொண்டுள்ளனர்.

எல்லோர் முன்னாலும் பாரதியை தான் காதலிக்கிறேன் என்ற உண்மையைப் போட்டு உடைக்க காத்திருக்கிறார் வெண்பா. அதேபோல் வெண்பா மற்றும் பாரதி இருவரும் மண மேடையில் மாலை மாற்றிக் கொள்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் கொஞ்சு விளையாடுகிறார்கள்.

Also Read : ஏண்டா குழந்தைகளுக்கே தெரிஞ்சிருச்சு இன்னுமாடா சாவ அடிக்கிறீங்க.. கதறவிடும் பாரதி கண்ணம்மா

எப்படி இதற்கு பாரதி ஒத்துக் கொண்டார் என்ற பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியது. மேலும் இத்துடன் கண்ணம்மா சோலி முடிந்ததாக பலரும் கூறி வந்த நிலையில் மீண்டும் வெண்பா பாரதியுடன் நிச்சயதார்த்தம் நடந்தது போல கனவு கண்டுள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல் பாரதி என்று ரோஹித்தை கொஞ்சிக் குலாவிகிறார் வெண்பா. உண்மையிலேயே நம் மீது காதல் உள்ளது வெளியில் தான் சும்மா வெண்பா நடித்துள்ளார் என ரோஹித் எண்ணுகிறார். ஆனால் கனவிலிருந்து விழித்த வெண்பா ரோஹித்தை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

Also Read : அந்த குழந்தை அளவுக்கு கூட உனக்கு அறிவு இல்ல பாரதி.. குண்டு சட்டிக்குள்ளே குதிரை ஓட்டும் கண்ணம்மா

மேலும் வெண்பா தனது அம்மாவிடம் ரோகித் எனக்கு பிடிக்கவில்லை என வாதாடுகிறார். ஏனென்றால் ரோகித் சொந்தபந்தம் இல்லாத ஒரு அனாதை என கூறுகிறார். மேலும் ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்த பையனை தான் நான் திருமணம் செய்து கொள்வேன் என வெண்பா கூறுகிறார்.

உடனே சௌந்தர்யா நல்ல குடும்பத்து பையனாக இருந்தால் திருமணம் செய்து கொள்கிறாயா என கேட்கிறார். அதற்கு வெண்பாவும் சரி என்பது போல சொல்கிறார். இதனால் ரோஹித்தை தனது மகனாக சௌந்தர்யா தத்து எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : கட்டிப்பிடித்து எலும்பை உடைத்த சௌந்தர்யா.. மரண பீதியில் வெண்பா

Continue Reading
To Top