Connect with us
Cinemapettai

Cinemapettai

vembuli-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பாகுபலி படத்தில் நடித்தும் கண்டுக்கப்படாத சார்பட்டா பட வேம்புலி.. வைரலாகும் காளகேயர் கூட்ட புகைப்படம்

சமீபத்தில் அமேசான் தளத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்பட நடிகர்கள் பலருக்கும் சினிமாவில் சொர்க்க வாசல் திறந்துள்ளது என்று சொன்னால் மிகையாகாது. அந்தளவுக்கு சார்பட்டா படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்களுக்கும் படவாய்ப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன.

ஆர்யாவும் நீண்ட காலமாக சரிந்திருந்த மார்க்கெட்டை இந்த படத்தின் மூலம் தூக்கி நிறுத்தினார். அதனைத் தொடர்ந்து நீண்ட காலமாக சினிமாவில் இருந்தாலும் இதற்கு முன்னர் பெரிய பெரிய படங்களில் நடித்திருந்தாலும் சார்பட்டா மட்டும் தான் வேம்புலி நடிகர் மீதான கவனத்தை அதிகரித்தது.

ஆனால் அவர் அதற்கு முன்பே பல பிரம்மாண்ட படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் தோன்றியுள்ளார். ஆனால் அப்போதெல்லாம் அவர் கவனிக்கப்படாமல் போய்விட்டார். அப்படி ஒரு படம் தான் பாகுபலி.

ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தில் அதிக கவனம் பெற்றது கிளைமாக்ஸ் காட்சியில் வரும் காளக்கேயர் கூட்டம் தான். இந்த கூட்டத்தில் ஒருவராக வேம்புலி நடிகர் ஜான் நடித்துள்ளார். ஆனால் அப்போது அவரை யாருக்குமே தெரியாது.

john-vembuli-fame-in-bahubali

john-vembuli-fame-in-bahubali

அதேபோல் இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த கேஜிஎஃப் படத்திலும் இவர் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதிலும் கூட்டத்தோடு கூட்டமாக நடித்ததால் இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

சமீபத்தில் வந்த சார்பட்டா படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த பிறகுதான் இவர் முன்னால் என்னென்ன படங்களில் நடித்துள்ளார்? என பலரும் இணையத்தில் தேடிப்பார்த்து பாகுபலி மற்றும் கேஜிஎப் படங்களில் நடித்துள்ளதை நினைவுபடுத்துகின்றனர். இது அப்போதே கவனிக்கப்படவில்லை என்ற வருத்தம் ஜானுக்கு அதிகமாகவே இருந்ததாம்.

Continue Reading
To Top