விமல்

விமல் நீண்ட இடைவெளிக்கு பிறகு இவரின் படம் ‘மன்னர் வகையாறா’ ரிலீஸ் ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை தான் பெற்றது. அதன் பின் மனிதர் பல படங்களில் புக் ஆகியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

vimal

வரலக்ஷ்மி சரத்குமார்

சமீப காலமாக வரலக்ஷ்மி நிறைய படங்கள் நடிக்க கமிட் ஆகிறார் என்று தான் சொல்ல வேண்டும். கதாநாயகி மட்டுமன்றி நடிக்க ஸ்கோப் உள்ள படங்களை தேர்வு செய்கிறார் என்பது தான் கூடுதல் பிளஸ்.

Varalakshmi Sarathkumar

கன்னி ராசி

இந்நிலையில் இந்த இருவரும் இணைந்து நடிக்கும் படத்திற்கு கன்னி ராசி என தலைப்பு வைத்துள்ளனர். அறிமுக இயக்குநர் எஸ்.முத்துக்குமரன் என்பவர் இப்படத்தை இயக்கி வருகிறார். இவர் இயக்குநர் சுந்தர்.சி அவர்களின் அசிஸ்டன்ட் ஆவார்.

Kanni Raasi

இயக்குநர் பாண்டியராஜன், ரோபோ ஷங்கர், யோகி பாபு, ‘போராளி’ திலீபன், சாம்ஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். விஷால் சந்திரசேகர் இசை. செல்வகுமார் ஒளிப்பதிவு. ‘கிங் மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் சார்பில் ஷமீம் இப்ராகிம் தயாரித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம்.

Kanni Rasi First Look POster

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் ஜெயம் ரவி வெளியிட்டார். இது ரசிகர்களிடையே நல்ல ரீச் ஆகியுள்ளது.

கன்னி ராசி பழசு

பாண்டியராஜன் இயக்கத்தில் 1985 இல் வெளிவந்த படம் கன்னி ராசி. இப்படத்தில் பிரபு, ரேவதி நடித்திருப்பார்கள். இதில் ஜோசியம் காரணாமாக பிரபு ரேவதியின் காதல் புறக்கணிக்கப்படும்.

கன்னி ராசி புதுசு

ஹீரோ விமலின் குடும்பத்தினர் அனைவரும் கன்னிராசியாம் . அனைவருமே காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். ஆனால் விமல், பெற்றோர்கள் பார்க்கும் பெண்ணைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்ற லட்சியத்துடன் இருக்கிறாராம். இந்நிலையில் விமலின் எதிர் வீட்டுக்கு கூடிவருகின்றனர் வரலக்ஷ்மி பேமிலி.

kanni rasi

இரு குடும்பங்களுக்கும் இடையில் நடக்கும் சம்பவங்களை தன் குருநாதர் ஸ்டைலில் காமெடி படமாக எடுத்துள்ளாராம் இயக்குனர்.