fbpx
Connect with us

Cinemapettai

அரவிந்தசாமியின் படத்திற்கு தடை விதிக்க கோரி புகார் அளித்த பிரபல நடிகர் !

News | செய்திகள்

அரவிந்தசாமியின் படத்திற்கு தடை விதிக்க கோரி புகார் அளித்த பிரபல நடிகர் !

‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்துக்கு எதிராக  தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடிகர்  விமல் புகார் அளித்திருப்பதால், வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.

vimal

மலையாளத்தில் 2015 -ம் ஆண்டு நயன்தாரா மற்றும் மம்மூட்டி நடிப்பில் வெளிவந்த “பாஸ்கர் தி ராஸ்கல்” என்ற திரைப்படத்தின் ரீமேக் தான் தற்பொழுது தமிழில் உருவாகியுள்ளது.யக்குனர் சித்திக் இயக்கத்தில், அரவிந்த் சாமி, அமலா பால்,பேபி நைனிகா, மாஸ்டர் ராகவன், சூரி, ரோபோ ஷங்கர் , ரமேஷ் கண்ணா போன்றோர் நடித்துள்ள காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படம்.

பொங்கல் தினத்தில் வெளியாக அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று கொண்டு வருகிறது. இந்த நிலையில் பிரபல நடிகர் விமல் திடீரென நடிகர் சங்கத்தில் இந்த படத்தை வெளியிடக்கூடாது என்று புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில் கூறியதாவது “நான் தயாரிப்பாளர் முருகனின் ‘ஹேமந்த் மூவீஸ்’ தயாரிப்பில் ‘ஜன்னல் ஓரம்’ என்ற படத்தில் நடித்திருந்தேன். இந்த பட வெளியீட்டு சமயத்தில் நிதி நெருக்கடியில் தயாரிப்பாளர் சிக்கியிருந்த காரணத்தால் திட்டமிட்ட தேதியில் படத்தைக் கொண்டு வர முடியாமல் சிரமப்பட்டார். அப்போது என்னை அணுகி பட வெளியீட்டிற்காக நிதியுதவி செய்யும்படியும், படம் வெளியான பிறகு ஒரே வாரத்தில் பணத்தை திருப்பித் தருவதாகவும் உத்தரவாதம் அளித்ததை அடுத்து, ‘கோபுரம் பிலிம்ஸ்’ அன்புச்செழியனிடமிருந்து ரூ.25 லட்சமும், ‘லட்சுமி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனத்திடமிருந்து ரூ.65 லட்சமும் கடனாக பெற்று முருகனிடம் கொடுத்தேன்.

vimal

நான்கு வருடங்கள் முடிவடைந்த நிலையில் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரிடமிருந்து ஒரு ரூபாய் கூட எனக்கு திரும்பி வரவில்லை. ஆனால் நிதியுதவி செய்தவர்களுக்கு வட்டியோடு திருப்பித் தர வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு நான் உள்ளாகி, தொழில் கவனம் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் முருகன், அவருடைய மனைவி பெயரில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ என்ற படத்தை தயாரித்துள்ளார். ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ பட வெளியீட்டிற்கு முன் என்னுடைய பணத்தைப் பெற்றுத் தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று விமல் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top