Connect with us
Cinemapettai

Cinemapettai

Reviews | விமர்சனங்கள்

விமல் துப்பறியும் தரமான திரில்லர்.. விலங்கு வெப் சீரிஸ் விமர்சனம்

இந்த கொரானா காலகட்டத்தில் மக்களிடம் அதிகம் ரீச் ஆன விஷயம் எனில் அது ஓடிடி தளங்கள் தான். திரையில் ரிலீஸ் ஆன பின்பு அல்லது திரை அரங்கில் வியாபாரம் ஆகாத படங்கள் தான் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என இருந்த நிலை மாறிவிட்டது. இன்று ஓடிடிக்காக சிறப்பான கன்டென்ட் ரெடி செய்து அதனை வியாபாரம் ஆக்கி வருகின்றனர்.

எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தயாரிப்பில் விமல், இனியா, பாலசரவணன், முனிஸ்காந்த, ரேஷ்மா, மனோகர் மற்றும் பலர் நடிப்பில் ஜீ 5 தமிழ் ஆப்பில் வெளியாகி உள்ள தொடர் தான் விலங்கு. ஜி வி பிரகாஷின் பு ரூஸ்லி படத்தை இயக்கிய பிரசாந்த் பாண்டிராஜ் இந்த தொடரை இயக்கியுள்ளார். 7 அத்தியாயம் கொண்ட இந்த தொடர் திருச்சி அருகில் உள்ள காவல் நிலையத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

கதை– சப் இன்ஸ்பெக்டராக விமல், அவரது மனைவி இனியா நிறை மாத கர்பிணி. இன்ஸ்பெக்டர் மனோகர் தனது பேத்தி காது குத்து என்பதனால் ஸ்டேஷனில் இல்லை. எஸ் பி ஸ்டேஷன் வருகிறார், மேலும் MLA மச்சான் காணாமல் போன கேஸை சீக்கிரம் முடிக்க சொல்கிறார்.

அந்த நேரத்தில் தான் காட்டு பகுதியில் ஒரு பிணம் இருப்பதாக தகவல் வருகிறது. அங்கு போலீஸ் சென்று பார்வையிட சிறிது நேரத்தில் பிணத்தின் தலை மட்டும் மிஸ்ஸிங். குழம்புகிறது போலீஸ். மனைவி அங்கு மருத்துவமனையில் அனுமதிக்க பட, இங்கு தலை தொலைந்ததற்கு விமல் பொறுப்பாகிறார். காசை கொடுத்து பிற அரசு ஊழியர்களை சமாளிக்கிறார்.

ஒருவாரத்திற்குள் தலை கிடைக்க வேண்டும். கிடைத்த க்ளூ வைத்து திருவிழா நடக்கும் இடத்திற்கு செல்கிறது இந்த டீம். அங்கு அடுத்த பிணம் கிடைக்கிறது. இறந்தவனின் போனில் வேறு ஒரு சிம் போடப்பட்டதை கண்டுபிடித்து விசாரிக்க, ஸ்டேஷனில் எடுபிடி வேலை செய்பவன் பக்கம் கேஸ் திரும்புகிறது. மனைவி வேறு ஒருவனுடன் ஓடிவிட தன் மகளுடன் இருப்பவன் தான் அந்த கிச்சா.

புதையலை தோன்ற போக பூதம் கிளம்பிய கதை போல அடுத்தடுத்து நடக்கும் ட்விஸ்ட் அனைத்துமே வேற லெவல். இறுதியில் தலை கிடைத்ததா, குற்றவாளி யார் என்பதே மீதி எபிசோடுகள்.

சினிமாபேட்டை அலசல்– விமல், பால சரவணன் என நமக்கு பழக்கப்பட்ட முகங்கள். முதல் எபிசோடு பார்க்கும் பொழுதே நம்மையும் அந்த போலீஸ் ஸ்டேஷனில் ஒருவராக உணர வைக்கிறார் இயக்குனர், இதுவே பெரிய ப்ளஸ். காவல் நிலையத்தின் ஒர்கிங் ஸ்டைல், அந்த ஊரில் உள்ள ஜாதி பிரச்சனை, போலீஸ் வாழ்க்கையில் எவ்வளவு அழுத்தம் என பல விஷயங்களை நாம் பார்க்க முடிகிறது.

சொகுசாக வாழ நினைத்து ஆண்களின் சபலத்தை தூண்டி பணம் பறிப்பதாகட்டும், புதையல் உள்ளது என ஆசை காட்டி மக்களிடம் திருடுவது என நாம் நியூஸில் பல முறை பார்த்த விஷயம் தான் இந்த தொடருக்கு இன்ஸபிரேஷன். கூடவே அனைவராலும் இளக்காரமாக பார்க்கும் நபரின் மனதில் எவ்வளவு வன்மம் இருக்கக்கூடும் எனவும் இந்த சீரிஸ் நமக்கு காட்டுகிறது.

சினிமாபேட்டை வெர்டிக்ட்– ஓடிடி ரசிகர்கள் இந்த தொடரை கட்டாயம் கொண்டாடுவர். நம் லோக்கல் செட் அப்பில் தரமான சீரிஸ். இசை, எடிட்டிங், கலை, ஒளிப்பதிவு, நடிகர் நடிகையர் தேர்வு என அனைத்துமே ப்ளஸ் தான். 7 அத்தியாயம் என இழுக்காமல் இன்னும் சற்றே சீக்கிரமாக கூட முடித்திருக்கலாம். அதே போல விமல், பால சரவணன் போன்றவர்கள் க்ளீன் ஷேவ் செய்து இருக்கலாம்.

சினிமாபேட்டை ரேட்டிங் – 3.75 / 5

Continue Reading
To Top