Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அன்றே சூப்பர் ஹிட் சீரியலில் நடித்துள்ள விமலின் போட்டோ- விடா முயற்சி விஸ்வரூப வெற்றி பாஸ்

கோலிவுட்டில் பலருக்கு விஜய் சேதுபதி, விமல் வளர்ந்து வந்த பாதை தெரியும் . கூத்துப்பட்டறை , சினிமாவில் துணை நடிகர்களாக ஆரம்பித்து இன்று ஹீரோவாக கால் ஊன்றி இருக்கின்றனர். வெற்றியை அடைய இவர்கள் பட்ட சிரமங்கள், துன்பங்கள், போராட்டங்கள் சொல்லி மாளாது.

வருடத்திற்கு ஒன்று அல்லது அதிகபட்சம் இரண்டு படங்கள் நடிக்கும் பெரிய ஹீரோக்கள் மத்தியில் இந்த இருவரும் சுமார் வருடத்திற்கு 7 – 8 படங்கள் நடித்து வருபவர்கள். விமல் மினிமம் கேரண்டி ஹீரோ என்ற அந்தஸ்தை பிடித்துவிட்டார்.

பசங்க, களவாணி, வாகை சூடவா என வரிசையாக வெற்றி படங்களை கொடுத்தவர். ஹீரோவாக ஆவதற்கு முன் நடிகர் விமல், கில்லி, குருவி உள்ளிட்ட படங்களில் துணை நடித்துள்ளார் என்பதை நாம் அறிவோம்.

இந்நிலையில் விமல் சின்னத்திரை சீரியலிலும் நடித்துள்ளார் என்ற போட்டோ இணையத்தில் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

vemal acted as junior artist in tv serial

சன் டிவியில் ஹிட் அடித்த ராதிகாவின் சித்தி சீரியலில் நடித்துள்ளார் நடிகர் விமல். சைடு ரோல் போல நின்று நடித்துள்ளார். அவர் நடித்துள்ள காட்சியின் போட்டோ தற்போது சமூக வலைத்தளத்தில் பெரிதும் வைரலாகி வருகிறது.

Continue Reading
To Top