Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரம்யா பாண்டியன் நரி தந்திரத்தை வெளிபடுத்திய வேல்முருகன்.. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி அளித்த பகிரங்க பேட்டி!
தற்போது மக்களால் விரும்பி பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக பிக்பாஸ் சீசன்4 மாறிவருகிறது.
இந்த சூழலில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இரண்டாவது நபரான வேல்முருகன் தற்போது ஊடகங்களில் பகிரங்கமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில் ரம்யா பாண்டியன் பிக்பாஸ் வீட்டில் பச்சோந்தி வேஷம் போடுவதாக அதிர்ச்சியான தகவலை வெளியிட்டார்.
ஏனென்றால் அவர் ரசிகர்களிடமும் கமலிடமும் நல்ல பேரை வாங்குவதற்காகவே வெளிவேஷம் போடுவதாக வேல்முருகன் கூறியது ரம்யா பாண்டியன் ஆர்மி ரசிகர்களையே கதிகலங்க வைத்தது.
மேலும் ‘ரம்யா பாண்டியன் தான் பிக்பாஸ் சீசன்-4ன் வெற்றியாளர்!’ என்று ரசிகர்கள் எண்ணிக்கொண்டிருந்த நிலையில், தற்போது வேல்முருகன் ரம்யா பாண்டியனை பச்சோந்தி என்று கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே தற்போது ரம்யா பாண்டியன் உண்மையிலேயே பச்சோந்தி வேஷம் தான் போடுகிறாரா? என்ற சந்தேகத்தில் ரசிகர்கள் ஆழ்ந்துள்ளனர்.

sanam-velmurugan
