ரஜினிகாந்தை அழைத்து தன் அறக்கட்டளை மூலம் வழங்கப்படும் வீடுகளை திறந்து வைக்க விருப்பப்பட்டார் லைக்கா தயாரிப்பு நிறுவன ஓனர் சுபாஷ்கரன்.

ஆனால், அவர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர். அதனால ரஜினி அந்த விழாவுக்கு போகக்கூடாது என்று திருமாவளவன், வேல்முருகன், வைகோ ஆகியோர் வேண்டுகோள் விடுத்தனர். அதற்கு ரஜினி போகவேண்டாம் என்று முடிவு செய்தார்.

இது குறித்து டிவியில் விவாதங்கள் நடந்தன. அதில் வேல்முருகன் கலந்துகொண்டு பேசினார். ஏன் ரஜினியை போகக்கூடாதுன்னு சொல்லுறீங்கங்கிற கேள்விக்கு, லைக்கா தயரிப்பாளர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர்.அவருக்கு வேற வழியில் வந்த பணத்தில் வீடுகள் கட்டி தருகிறார் என்று வேல்முருகன் பதில் அளித்தார்.

சனிக்கிழமை நடைபெற்ற அந்த டிவி விவாதத்தில் வேல்முருகன் பேசிய கருத்துக்கள் அவதூறானவை என்று லைக்கா அவதூறு வழக்கை தொடர வேல்முருகனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

“ஆதாரம் இல்லாமல் இப்படி பேசியுள்ளது தவறு, அவரை அவதூறு செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் பேசி இருக்கிறீர்கள். சினிமாக்காரர்களை இலங்கை அழைத்து சென்று, இலங்கை அரசு செய்த கொடுமைகளை நியாயப்படுத்தும் முயற்சி என்று சொல்லியிருக்கிறீர்கள்.

கத்தி படத்தின்போதே கொடுத்த தொல்லைகளில், உயர்நீதிமன்றம் தலையிட்டு லைக்கா பெயரை படத்தில் பயன்படுத்த வழியமைத்து கொடுத்தது” என்று ஆரம்பித்து, ” 24 மணி நேரத்தில் மீடியாவை கூட்டி மன்னிப்பு கேட்கணும், இல்லன்னா…வழக்கு தொடர்ந்து 10 கோடி நஷ்ட ஈடு கேட்போம்” என்று அந்த நோட்டீஸில் சொல்லியுள்ளது.