‘கொலவெறி டி’ பாடலிற்கு பிறகு யூ டியூபில் மறுபடி ஒரு பாடல் ஹிட் அடித்துள்ளது என்றால், அது மோகன்லால் நடிப்பில் லால் ஜோஸ் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘வெளிபாடிண்டே புஸ்தகம்’ என்ற படத்தின் “என்ட அம்மே ஜிமிக்கி கம்மல்” என்ற பாடல் தான் .

ஷான் ரகுமான் இசையில் , அணில் பஞ்சுரான் வரிகளில் இப்பாடலை பாடியது , இயக்குனர் , நடிகர் , பாடகர் வினீத் ஸ்ரீனிவாசனும் மற்றும் பாடகர் ரஞ்சித் உன்னி . ஆகஸ்ட் 19 யு டியூபில் வெளியான இப்பாடல் இன்றளவு 8  மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது .

பாடல் வரிகள் :”என் அம்மாவின் ஜிமிக்கி கம்மல், என் அப்பன் அதை திருடி சென்று ….. என் அப்பாவின் பிராந்தி பாட்டில், என் அம்மா குடிச்சு முடித்து …”என்று தொடங்கும் அந்த பாடல் கல்லூரி வளாகத்தில் ஒரு கொண்டாட்டம் போல் அமைக்கப் பெற்றிருக்கும் .

படத்தின் ப்ரோமஷனுக்காக , ஹாஷ்டாக் இட்டு உங்களின் டான்ஸ் விடியோவை அப்லோட் செய்யுங்கள் என்று தயாரிப்பாளர் டான்ஸ் சாலேஞ் விட்டதன் விளைவே இத்தனை விடீயோக்கள் .

அதிலும் இந்தியன் ஸ்கூல் ஆப் காமெர்ஸ் பெண்களின் டான்ஸ் வீடியோ தற்பொழுது 4 மில்லியன் பார்வைகளை தாண்டியுள்ளது.

ஓணம் அன்று ரிலீஸ் ஆன இப்படம் பிளாப் என்றே கூறுகிறார்கள் . எனினும் இப்பாடல் மட்டும் கேரளாவை போல் தமிழ் நாட்டிலும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது .

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்:  இப்படியே போச்சுன்னா நம்ம விஜய் டிவி இதுல ஒரு பெண்ணை நம்ம பிக் பாஸ் வீட்டில் இறக்கினாலும் ஆச்சிரியம் இல்லை.