Lifestyle | வாழ்க்கைமுறை
சென்னை மக்களை ஆஃபர்களால் அலறவிடும் வேலவன் ஸ்டோர்ஸ்.. வேற லெவல் போங்க!
தூத்துக்குடியில் தங்கவேல் மற்றும் வேலவன் ஆகியோரால் தொடங்கப்பட்ட கடைதான் வேலவன் ஸ்டோர்ஸ். இந்தக் கடையில் ஆடை முதல் ஆபரணங்கள் வரை, வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைத்ததால் இந்தக் கடை தூத்துக்குடி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதன் காரணமாக வேலவன் ஸ்டோர்ஸ் தற்போது சென்னையில் உள்ள டி நகர் உஸ்மான் ரோட்டில் ஏழடுக்கு தளமாக உருவெடுத்து, சென்னை வாசிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்தக் கடையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் தனித்தனியாக தளங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறதாம்.
ஏற்கனவே இந்த கடையில் தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகைகளுக்கு தள்ளுபடி விற்பனை நடைபெற்றதோடு மிகக் குறைந்த விலையில் நிறைந்த தரம் உள்ள பொருட்கள் கிடைத்ததால், சென்னை மட்டுமின்றி சென்னை சுற்றுப்புற மக்களும் இந்தக் கடையில் வந்து ஷாப்பிங் செய்தனர்.
மேலும் புத்தாண்டு தினமான ஜனவரி 1ஆம் தேதி கூட, வேலவன் ஸ்டோர்ஸில் மக்கள் கூட்டம் அலைமோதியதாக கூறப்படுகிறது.
அதேபோல், புத்தாண்டை தொடர்ந்து தற்போது பொங்கல் தள்ளுபடி விற்பனையை வேலவன் ஸ்டோர்ஸ் கடை தொடங்கிவிட்டதாக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
எனவே, எங்கும் கிடைக்காத புதிய டிசைன்களில் ஆடை, ஆபரணங்கள் குறைந்த விலையில் இருப்பதால், பல்வேறு தரப்பினரும் பொங்கலுக்கான உடைகளை வாங்க வேலவன் ஸ்டோர்ஸில் குவிந்தவண்ணம் இருக்கின்றனராம்.
மேலும் வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்த மக்களின் அனுபவங்களைப் பற்றிய வீடியோவை பார்க்க கீழே கிளிக் செய்யவும்.
