கதை

ரோபோ ஷங்கர் எம்.எல்.ஏவாக தன் ஊரில் இலவச திருமணம் செய்து வைக்கின்றார். இதில் ஒருவர் மட்டும் ஓடி போக, மானம் போக கூடாது என்று சூரியை வலுக்கட்டாயமாக புஷ்பா என்பவருக்கு நாடக கல்யாணம் செய்து வைக்கின்றனர்.

இதனால், அவருக்கு அடுத்த சில மாதங்களில் தன் மாமன் மகளுடன் நடக்கவிருந்த திருமணம் நிற்கும் நிலை ஏற்படுகின்றது. இதேபோல் விஷ்ணு, நிக்கி கல்ராணி மீது கொண்ட காதலால் அவருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி அவர் அப்பாவிடம் ரூ 10 லட்சம் பணம் வாங்கி ரோபோ ஷங்கர் கையில் கொடுக்கிறார்.

ரோபோ ஷங்கர் கட்சியின் அமைச்சருக்கு உடல்நிலை சரியல்லாமல் போகின்றது. அப்போது அவரை அழைத்து ரூ 500 கோடி ஒரு இடத்தில் இருப்பதாக சொல்லிவிட்டு இறக்கிறார். அந்த 500 கோடியை அபகறிக்க, அமைச்சர் மனைவியின் தம்பி ரவிமரியா ரோபோ ஷங்கரை துறத்துகிறார்.

ரோபோ ஷங்கர் ஒரு பெரிய விபத்தில் பழைய விஷயங்களை மறந்து 10 வயதுக்கு திரும்புகிறார்.இதன்பின் புஷ்பா திருமணம் நாடகம் தான் என சூரி நிரூபித்தாரா? அந்த ரூ. 10 லட்சம் பணத்தை நிக்கி கல்ராணியிடம் விஷ்ணு திருப்பிக்கொடுத்து தன் காதலில் வெற்றி பெற்றாரா? அந்த ரூ. 500 கோடியை ரவிமரியா கண்டுப்பிடித்தாரா? இவை அனைத்திற்கும் மேல் ரோபோ ஷங்கருக்கு பழைய நினைவு திரும்ப வந்ததா? என்பதை வயிறு வலிக்க சிரிக்க வைத்து கூறியிருக்கிறார் எழில்.

விமர்சனம்

சூரியின் புஷ்பா காமெடி செம்மையாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது, கலக்கிவிட்டார்.ரவி மரியா தேசிங்குராஜா படத்தில் பார்த்ததை விட பல மடங்கு சிரிக்க வைக்கிறார்.

ரோபோ ஷங்கர் ஒன் மேன் ஷோவாக காமெடியில் மிரட்டுகிறார். சுவாமிநாதன் சில நிமிடம் வந்தாலும் கலக்கிவிட்டு செல்கிறார்.

படத்தின் கதையை கூகுலில் தான் தேட வேண்டும்.காமெடி படம் என்றாலும் கிளைமேக்ஸ் முடிந்தது போல் இருந்தும் மீண்டும் பங்களாவில் வரும் சில காட்சிகள்.

படத்தின் பாடல்கள் குறிப்பாக கிளைமேக்ஸில் எதற்கு அந்த குத்து சாங்.

மொத்தத்தில் இந்த வெள்ளைக்காரன் வேலையில் கரெக்ட்டா இருந்திருக்கிறான்..படம் முழுவதும் சிரித்து விட்டு சந்தோஷமாக வெளியே வரலாம்…

ரைடிங் 3.0/5