சக்கப்போடு போடு ராஜா

தெலுங்கு ரீ- மேக்

கோபிசந்த், ராகுல் ப்ரீத் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான “லௌக்யம்” படத்தின் ரீ- மேக்கில் தான் சந்தானம் நடித்துள்ளார். தெலுங்கு மட்டும் இன்றி பெங்காலி, கன்னடம் என் ஏற்கனவே இப்படம் இரண்டு மொழிகளில்  ரீ- மேக் ஆகியுள்ளது.

காமெடி கூட்டணி

சந்தானம் ஹீரோவாகி விட்ட நிலையில், இப்படத்தில் மெயின் காமெடியனாக விவேக் அவர்கள் இடம்பெற்றுள்ளார். அது மட்டும் அல்லது ரோபோ ஷங்கர் மற்றும் வி டி வி கணேஷ் என டயமிங் காமெடி வேறு எக்ஸ்ட்ரா பிளஸ் இப்படத்திற்கு.

இசையமைப்பாளர் எஸ்.டி.ஆர்

ஏற்கனவே சிம்புவின் இசையமைப்பில் பாடல்கள் ஹிட் ஆகியுள்ளது. மேலும்  பின்னணி இசைக்காக  புதிய முயற்சிகளைச செய்திருக்கிறாராம் சிம்பு. அது  ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸாக இருக்கும் என பேசப்படுகிறது.

வேலைக்காரன்

விளம்பரங்களில் நடிக்கமாட்டேன்

‘இனி விளம்பரங்களில் நடிக்கமாட்டேன். இது என் தனிப்பட்ட முடிவு’ என வேலைக்காரன் இசை  வெளியீட்டு விழாவில்  சிவகார்த்திகேயன் கூறினார். இந்த அதிரடி முடிவிற்கு  படத்தின் மையக்கரு தான் காரணம் என்கிறார்கள். பொழுதுபோக்கு அம்சங்களுடன்  படத்தில் சமூகத்திற்குத் தேவையான விழிப்புணர்வு கருத்தினையும் படத்தில் வைத்துள்ளாராம் மோகன் ராஜா.

பவர்புல் கதாபாத்திரங்கள்

வேலைக்காரன் படத்தின் மிகப்பெரிய பலம் கதாபாத்திரங்களின் தேர்வு தானாம். சிவகார்த்திகேயன், நயன்தாரா கூட்டணி. முதல்முறையாக  தமிழ் சினிமாவில் பாஹத் பாசில், அதுவும் வில்லனாக. சிவாவின் அக்காவாக சினேகா, அப்பாவாக சார்லி. ஏரியா நபர்களாக ரோபோ ஷங்கர், விஜய் வசந்த். சிறப்பு தோற்றத்தில் பிரகாஷ் ராஜ்.  இவ்வளவு பெரிய நட்சத்திர கூட்டத்தை வைத்திருந்தாலும், அனைவருக்கும் கதையில் முக்கியத்துவமான பங்களிப்பு இருக்கிறதாம்.

velaikaran

டெக்னிக்கல் டீம்

சிவகார்த்திகேயன் படம் என்றாலே இசை அனிருத் என்பது எழுதப்படாத ரூல் ஆகிவிட்டது.  கருத்தவன்லாம் கலீஜாம், இறைவா என இரண்டு  பாடல்கள் மாஸ் ஹிட் ஆகியுள்ள நிலையில், பின்னணி இசை பற்றிய எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

ராம்ஜி ஒளிப்பதிவு. எடிட்டிங் விவேக் ஹர்ஷன், ரூபன். கலை இயக்குனர் முத்துராஜ் (படத்தில் இடம்பெறும் சேரி காட்சிகளுக்காக  மட்டுமே ஏழரை ஏக்கரில் செட் அமைத்து அசத்தியுள்ளாராம்) மோகன் ராஜா இயக்கம் என அசத்தலான டீம் என்பதால் படத்தின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது.