Connect with us
Cinemapettai

Cinemapettai

இந்த ரிஸ்க் தேவையா? வேலைக்காரன் மூன்றரை மணி நேரம் ஓடுமாம்..

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்த ரிஸ்க் தேவையா? வேலைக்காரன் மூன்றரை மணி நேரம் ஓடுமாம்..

சிவகர்த்திகேயன் மிகவும் கஷ்டப்பட்டு திரைக்கு வந்தார் இவருக்குன்னு ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் இவர் இப்பொழுது வேலைக்காரன் படத்தில் நடித்துள்ளார் இதில் நயன்தாரா ஜோடியாக நடித்துள்ளார், ’24 ஏ.எம்.ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரிப்பில் மோகன்ராஜா இயக்கும் வேலைக்காரன் படம் விநாயக சதுர்த்திக்கு ரிலீஸாக இருந்தது.அந்த தேதியில் விவேகம் ரிலீஸ் ஆனதால், வேலைக்காரன் ரிலீஸை ஆயுதபூஜை விடுமுறையையொட்டி இம்மாதம் 29-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.ஆயுதபூஜைக்கும் அரை டஜன் படங்கள் வெளிவரவிருப்பதால் தீபாவளிக்கு வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.sivakarthikeyan velaikaran

தீபாவளிக்கு மெர்சல் வெளியாகவிருப்பதால் வேலைக்காரன் படத்துக்கு போதிய தியேட்டர்கள் கூட கிடைக்காது என்பதால் ரிலீஸை டிசம்பர் 22-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்கள்.ஆனாலும் ‘வேலைக்காரன்’ படத்தின் ரிலீஸ் தேதியில் தொடர்ந்து குழப்பம் நிலவிவருவதாக சொல்லப்படுகிறது.
டிசம்பர் மாதம் ‘வேலைக்காரன்’ வெளியாவது சந்தேகம் என்றே படக்குழுவினர் கிசுகிசுக்கிறார்கள்.

காரணம். பலகட்டமாக படத்தொகுப்பு முடிவடைந்தநிலையிலும் வேலைக்காரன் படத்தின் ஃபைனல் ஃபுட்டேஜ் மூன்றரை மணி நேரமாக இருக்கிறதாம்.இந்த மூன்றரை மணி நேரப்படத்தை பலமுறை பார்த்த சிவகார்த்திகேயனும் அவரது மானேஜரும் இரண்டேகால் மணி நேரமாக படத்தின் நீளத்தைக் குறைக்கும்படி மோகன்ராஜாவிடம் சொல்லி இருக்கின்றனர்.இயக்குநர் மோகன்ராஜாவோ 2 மணி நேரம் 40 நிமிடமாக ட்ரிம் பண்ணலாம் என்று நினைக்கிறாராம்.

இது தொடர்பாக மோகன்ராஜாவுக்கும், சிவகார்த்திகேயன் தரப்புக்கும் சின்னதாக மனக்கசப்பு நிலவுகிறதாம்.படத்தின் நீளம் குறித்து இரண்டு தரப்பும் ஒரு முடிவுக்கு வந்து பிறகு ஃபைனல் எடிட்டிங்கைத் தொடங்கி முடித்து பிறகு பின்னணி இசையமைப்பு முடிய சில மாதங்களாகிவிடும் என்கிறார்கள்.ரஜினி மாதிரி வர ஆசைப்படலாம். ரஜினி ஆக ஆசைப்படலாமா சிவகார்த்திகேயன்?  வேலைக்காரன் 2018 பொங்கலுக்குத்தான்.!?

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top