சந்தோஷ்சுப்ரமணியம், தனி ஒருவன் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர் மோகன் ராஜா எழுதி இயக்கும் த்ரில்லர் படமான வேலைக்காரன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூன் 5ம் தேதி வெளியானது.

கதாநாயகனாக சிவகார்த்திகேயன், கதாநாயகியாக நயன்தாரா மற்றும் பிரபல மலையாள நடிகர் பகத்பாசில், பிரகாஷ்ராஜ், சினேகா மற்றும் தம்பிராமையா போன்ற பெரும் நட்சத்திர நடிகர்கள் வேலைக்காரன் படத்தில் நடித்திருக்கின்றனர்.

velaikaran

சிவகார்த்திகேயனின் படத்திற்கு எப்போதும் இசை அமைக்கும் இசையமைப்பாளரான அனிருத் இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். ரெமோ படத்தை தயாரித்த 24ஏஎம் ஸ்டுடியோஸ் ஆர்.டி.ராஜா-வே இந்தப்படத்தையும் தயாரிக்கிறார்.

படத்தின் இறுதிகட்டப்பணிகள் நடந்துவரும் நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகும் என்று படக்குழுவின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் படி அப்படத்தின் இயக்குநர் மோகன் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் டீசரை வெளியிட்டார். ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பையும் பெற்றது.

velaikaran

பாகுபலி படத்தைப் போன்று ‘வேலைக்காரன்’ படத்தையும் இரண்டு பாகங்களாக வெளியிட பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இந்தப் படத்தின் ஃபுட்டேஜ், நான்கரை மணி நேரம் இருக்கிறதாம். என்ன செய்வதென்று சில நாட்களாக மண்டையைப் பிய்த்துக் கொண்டிருந்த படக்குழுவினர், சிவகார்த்திகேயன் சொன்ன ஒரு விஷயத்தால் ஷாக் ஆகிவிட்டார்களாம்.

படத்தை இரண்டாகப் பிரித்து, ‘பாகுபலி’ போல இரண்டு பாகங்களாக வெளியிடலாம் என்பது சிவகார்த்திகேயன் கருத்து. ‘ஒரு படத்துக்கு ஆன செலவை வைத்தே இரண்டு படங்களை ரிலீஸ் பண்ணி கல்லா கட்டிவிடலாம்’ என தயாரிப்பாளராகவும் சிவகார்த்திகேயன் நினைத்தது தான் இதற்கு காரணம் என்கிறார்கள்.

velaikaran

தற்பொழுது கிடுகிடுவென நடந்து முடிந்து விட்ட இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன, அதே நேரத்தில் தற்போது படத்தின் வியாபாரமும் தொடங்கியுள்ளது.

இந்த படத்தை வாங்கியுள்ளவர்களின் விவரங்கள் இதோ

கோயம்புத்தூர் – கந்தசாமி ஆர்ட்ஸ் சென்டர்

வடக்கு தெற்கு ஆற்காடு – எஸ். பிக்சர்ஸ் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.