வேலைக்காரன் படம் 22ஆம் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது, மேலும் டிக்கெட் புக்கிங்கும் தொடங்கி விட்டது.இந்நிலையில் இன்று மாலை இப்படத்தின் இதயனே பாடல் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

தனி ஒருவன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கத்தில், ராம்ஜியின் ஒளிப்பதிவில்  சிவகார்த்திகேயன், நயன்தாரா முதன்முதலாக ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் வேலைக்காரன் படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. மலையாள நடிகர் பகத் ஃபாஸில் வில்லனாக தமிழில் அறிமுகமாகிறார். மேலும் சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.