fbpx
Connect with us

பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக திரையரங்குகளில் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் !

News | செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக திரையரங்குகளில் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் !

மோகன் ராஜா இயக்கத்தில்  கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறை நேரத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் வேலைக்காரன்.  சிவகார்த்திகேயன், பாஹத் பாசில், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சார்லி, ரோகினி, ரோபோ ஷங்கர், வசந்த விஜய், ஆர். ஜே. பாலாஜி மற்றும் பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

velaikaran

இந்த படம் வரும் பிப்ரவரி 1 முதல் 15 வரை பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக திரையிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

24 AM Studios

“வேலைக்காரன் திரைப்படத்திற்கு நீங்கள் கொடுத்த பெருவெற்றிக்கும், பேராதரவிற்கும் முதல் நன்றி. வெற்றியோடு மக்களுக்கான நல்ல கருத்தை முன்னெடுத்துச் சென்றதில் மிக்க மகிழ்ச்சி. இந்த வெற்றிக்கு உறுதுணையாய் நின்று அடித்தளமிட்ட அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் திரைத்துறையின் 24 அமைப்புகளைச் சேர்ந்த அனைத்து தொழிலாள நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

‘வேலைக்காரன்’ படத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட உணவுப் பிரச்னையின் ஆழத்தையும், முக்கியத்துவத்தையும் மாணவர்களுக்கு முழுமையாகக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆசிரியர்களின் விருப்பத்தையும், வற்புறுத்தலையும் ஏற்று, ‘வேலைக்காரன்’ படத்தைப் பள்ளி மாணவர்கள் பார்ப்பதற்கு ஏற்றவாறு சில காட்சிகளை நீக்கிவிட்டு, இலவசமாகத் திரையரங்குகளில் பிப்ரவரி 1 முதல் 15 வரை திரையிட முடிவு செய்துள்ளோம்.

Velaikaran

பள்ளி நிர்வாகத்தினர் எங்களைத் தொடர்பு கொண்டால், பள்ளிகளுக்கு அருகில் இருக்கும் திரையரங்குகளில் படத்தைத் திரையிட விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் உதவியோடு ஆவன செய்யத் தயாராக உள்ளோம்” என குறிப்பிட்டுள்ளனர்.

24 AM Studios

மேலும் இதுகுறித்து தொடர்பு கொள்ள 7010165044 மற்றும் 9600045747 ஆகிய எண்களையோ அல்லது velaikkaran.schools@24amstudios.com என்கிற மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என்றும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top