‘புரூஸ் லீ’ படத்திற்கு பிறகு ஹீரோவாக ஜி.வி.பிரகாஷ் குமார் கைவசம் ‘அடங்காதே, 4ஜி, செம, குப்பத்து ராஜா, நாச்சியார், ஐங்கரன், சர்வம் தாள மயம், 100% காதல், கோபம், ரெட்டை கொம்பு’ என அடுத்தடுத்து படங்கள் வண்டிகட்டி நிற்கிறது.

இதில் ‘குப்பத்து ராஜா’ படத்தை பிரபல நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்கி வருகிறார். ‘விர்ஜின் பசங்கத் தலைவர்’ ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக பூனம் பாஜ்வா, பல்லக் என டபுள் ஹீரோயின்ஸாம்.

gv-prakash

முக்கிய வேடத்தில் இயக்குநர் பார்த்திபன் நடித்துள்ளார். ஜி.வி.பியே இசையமைத்து வரும் இதற்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

‘S ஃபோக்கஸ்’ என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். சமீபத்தில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டார்.

velaikaran

இப்போஸ்டர் விர்ஜின் பசங்கத் தலைவரின் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலானது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது.

தற்போது, படத்தை வருகிற கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம், ‘வேலைக்காரன்’.

velaikkaran

அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை ’24 AM STUDIOS’ தயாரித்திருக்கிறது.இதே நாளில்,  ‘வேலைக்காரன்’ படமும் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது..