ஒத்தி வைச்சுட்டாங்க… ஒத்தி வைச்சுட்டாங்க… வேலைக்காரன் ரிலீஸ் தேதியை ஒத்தி வைச்சுட்டாங்க.மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்கும் திரைப்படம் வேலைக்காரன். இப்படத்தில், மலையாளத்தில் முன்னணி நடிகரான ஃபஹத் ஃபாசில் வில்லனாக நடித்துள்ளார்.sivakarthikeyan velaikaran

பிரகாஷ் ராஜ், சினேகா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்தப்  படத்துக்கு, அனிருத் இசையமைத்துள்ளார்.  சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் வேலைக்காரன் படம் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது.

படம் இந்த மாதம் இறுதியில் 29ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் உள்ள நிலையில் படம் டிசம்பர் மாதத்திற்கு இப்படம் தள்ளி போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீபாவளிக்கு வெளியிட படக்குழு யோசித்தாலும், விஜய்யின் மெர்சல் படம் வெளியாவதால், தியேட்டர் கிடைப்பது கஷ்டம் என கருதி படத்தை டிசம்பர் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.