Tamil Cinema News | சினிமா செய்திகள்
பாரதிராஜாவின் கனவு ப்ரொஜெக்ட் குற்றப் பரம்பரை ரெடியாகிறது.. இம்முறை வேற லெவல்
வேல ராமமூர்த்தி எழுத்தாளர் மற்றும் தமிழ்த் திரைப்பட நடிகர். இவர் பாயும் புலி, சேதுபதி, கொம்பன், கிடாரி என பல படங்களில் நடித்துள்ளார். இவர் எழுதியதில், பட்டது யானை, குற்றப் பரம்பரை மற்றும் குருதி ஆட்டம் மிகவும் பிரபலம்.

kuttrap parambarai
இதில் குற்றப் பரம்பரை நாவலை படமாக்குவது பாரதிராஜாவின் கனவு. முன்பே இதனை படமாக பூஜை போட்டு, சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்தது பின்னர் ட்ராப் ஆனது. இயக்குனர் பாலா படமாக்குவதாக சொன்னார். அந்தசமயத்தில் தமிழ்த் திரையுலகத்தின் மிக முக்கியமான இயக்குனர்களாக கருதப்படும் பாரதிராஜா, பாலா இருவரும் “குற்றப் பரம்பரை” படத்தை உருவாக்கும் விவகாரத்தில் மோதிக்கொண்டனர்.
இந்நிலையில் குற்றப் பரம்பரையை வெப் சீரிஸ் ஆக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள். சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இயக்கப்போவது யார், பாரதிராஜாவின் ரோல் என்ன என்பது போன்ற அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
RealBreakingNews
Director #Bharathiraja 's Dream project #Kutraparambarai is on Now.
And this is gonna be a grand gala web series produced by #Vhouseproductions #SureshKamatchi Shoot starts soon 😉@sureshkamatchi @johnmediamanagr pic.twitter.com/UF5fINIukF— Cinemapettai (@cinemapettai) December 27, 2019
