Connect with us
Cinemapettai

Cinemapettai

சிம்பு படப்பிடிப்பில் தயாரிப்பாளர் எடுத்த அதிரடி முடிவு.. கொரோனா பீதியால் போட்ட மாஸ்டர் பிளான்!

str-maanadu-update-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிம்பு படப்பிடிப்பில் தயாரிப்பாளர் எடுத்த அதிரடி முடிவு.. கொரோனா பீதியால் போட்ட மாஸ்டர் பிளான்!

தமிழகத்தில் கொரோனா தாக்கத்தால் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் தற்போது சினிமா படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.

அந்த வரிசையில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், சிலம்பரசன் கதாநாயகனாகவும், கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்து வரும் படம் தான் மாநாடு.

இந்தப் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் முடிவடைந்த நிலையில், தற்போது பாண்டிச்சேரியில் இந்தப் படத்திற்கான மூன்றாம் கட்ட படப்பிடிப்பு துவங்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கொரோனா தொற்றால் படக்குழுவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதற்காக சித்த மருத்துவர் வீரபாபுவின் மேற்பார்வையில் மாநாடு படத்தின் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் சித்த மருத்துவர் வீரபாபுவின் வழிகாட்டுதலின்படி, தினசரி காலை மாலை என இருவேளைகளிலும் மூலிகை கசாயம் ஆரோக்கியமான உணவுமுறை என படக்குழுவினருக்கு வழங்கப்படுகிறது.

எனவே மாநாடு படப்பிடிப்பு தளத்தில் ஒரு மருத்துவ குழுவினருடன் பாதுகாப்பான முறையில் படப்பிடிப்பு நடத்தப்படுவதால் படக்குழுவினர் அனைவரும் கொரோனா தாக்கம் குறித்த எந்த ஒரு அச்சமும் இன்றி தங்கள் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும்  தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரவு பகல் பார்க்காமல் சித்த மருத்துவர் வீரபாபு சிறப்பான சிகிச்சையை அளித்து, பல நோயாளிகளை குணப்படுத்துவதால் மக்கள் மத்தியில் அவர் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறார்.

virababu-cinemapettai

virababu-cinemapettai

மேலும்  சித்த மருத்துவர் வீரபாபுவிடம் மாநாடு படக்குழுவினரின் பாதுகாப்பு பொறுப்பை ஒப்படைத்துள்ள தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் இந்த செயல் திரையுலகிற்கு முன்னுதாரணமாக விளங்குகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top