Veera Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற வீரா சீரியலில், பணத்தை வாங்கிட்டு பொய் சாட்சி சொல்லும் நபரை கையும் களவுமாக பிடிக்கும் விதமாக வீரா போட்ட ஸ்கெச்சில் அந்த நபர் மாட்டிக் கொண்டார். அதன்படி உங்க அக்கா கண்மணி தான் எனக்கு பணம் கொடுத்து பொய் சாட்சி சொல்ல வைத்தார் என சொல்லிவிட்டார். உடனே இதற்கு பின்னணியில் இருப்பது கண்மணி தான் என வீரா புரிந்து கொண்டார்.
அந்த வகையில் கண்மணி இடமிருந்து இந்த குடும்பத்தையும் மாறனையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இனி கண்மணிக்கு தங்கையாக மட்டும் இருந்தால் போதாது. கண்மணிக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்றால் அவருடைய பாதையிலே போய் பதிலடி கொடுக்க வேண்டும் என்று முடிவு பண்ணி விட்டார்.
அந்த வகையில் யாருக்கும் தெரியாமல் மாறன் மீது தற்போது நடக்கும் கேசில் ஸ்டே ஆடர்(Stay order) வாங்கும் விதமாக கண்மணி கையெழுத்துப் போட்ட மாதிரி வீரா கையெழுத்து போட்டு இந்த கேசை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறார். இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும் லாயர், ராமச்சந்திரன் வீட்டிற்கு வந்து இனி மாறனுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
இந்த கேசில் ஸ்டே ஆர்டர் வேண்டுமென்று உங்க வீட்டு மருமகள் கேட்டுக் கொண்டார் என்ன சொல்கிறார். அதன்படி எல்லோரும் வீரா என்று நினைக்கிறார்கள். ஆனால் லாயர் சொல்வது என்னவென்றால் உங்க மூத்த மருமகள் கண்மணி தான் இந்த கேசுக்கு ஸ்டே ஆடர் வாங்கி வைத்திருக்கிறார் என்று. இதை கேட்டதும் மொத்த குடும்பமும் கண்மணியா என்று அதிர்ச்சியாகி சந்தோசப்பட்டு கொள்கிறார்கள்.
அத்துடன் வள்ளியும், என்னுடைய மகனையும் குடும்பத்தின் சந்தோஷத்தையும் திரும்ப மீட்டுக் கொடுத்து இருக்கிறாய் ரொம்ப நன்றி என கண்மணிக்கு சொல்கிறார். ஆனால் கண்மணி இது எப்படி சாத்தியமாகும் நான் எதுவுமே பண்ணவில்லையே என்று வெளியே சொல்லவும் முடியாமல் குழப்பத்தில் இருக்கிறார். அந்த வகையில் போலீஸ் ஸ்டேஷனுக்கு போயி எனக்கு பதிலாக யார் கையெழுத்து போட்டா என்பதை மட்டும் கண்டுபிடித்து கொடுங்க என கேட்டு வருகிறார்.
வீட்டுக்கு வந்த கண்மணி இடம் வீரா கொடுக்கும் பதிலடி நான்தான் இதெல்லாம் செய்தேன். இதெல்லாம் உன்னிடம் இருந்து தான் கற்றுக் கொண்டேன். எப்படி மாறனை மாட்டி விட வேண்டும் என்பதற்காக பணத்தை கொடுத்து பொய் சாட்சி சொல்ல வச்சியோ அதே மாதிரி உன்னுடைய கையெழுத்து நானே போட்டு இந்த கேசை ஒன்னும் இல்லாமல் ஆக்கிவிட்டேன். இது சும்மா ட்ரையல் தான் இனிமேல் தான் என்னுடைய ஆட்டம் இருக்கிறது.
இதோடு நிறுத்த போவதில்லை மாறன் மீது எந்த குற்றமும் இல்லை என்று நிரூபித்துக் காட்டுவேன் என்று சவால் விடும் அளவிற்கு தரமான சம்பவத்தை செய்து விட்டார். அந்த வகையில் இனி அக்கா பாவம், கண்மணி வாழ்க்கை கெட்டுப் போகக் கூடாது என்று நினைப்பதை தாண்டி மாறனை காப்பாற்ற வேண்டும் என்ற முடிவுக்கு வீரா வந்து விட்டார். எது எப்படியோ இந்த கேஸ் விஷயத்தில் இருந்து மாறன் எஸ்கேப் ஆகிவிட்டார். ஆனால் வள்ளி மூலம் இந்த விபத்தை பண்ணியது ராகவன் தான் என்ற உண்மை வீராவுக்கும் தெரிய வந்து சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி விட்டது.