வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

கண்மணியின் பிளானை தரைமட்டமாக்க மாறனிடம் அன்பைப் பொழியும் வீரா.. தாலி பெருக்கு ஃபங்ஷனை நடத்தும் அத்தை

Veera Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் வீரா சீரியலில், கண்மணியின் மனசை மாற்றி கணவருடன் சந்தோசமாக சேர்ந்து வாழ வைக்க வேண்டும் என்பதற்காக வீரா, மாறனுடன் அன்பா இருப்பது போல் டிராமா பண்ணி வருகிறார். அதன் படி மாறனுக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வைத்து வாய்க்கு ருசியாக சமைத்து போடலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார்.

அந்த வகையில் கண்மணி வரும்போது மாறனிடம் அன்பாக பேசி ரொமான்ஸை காட்டும் விதமாக வீரா கொஞ்சுகிறார். இதனை பார்த்து கடுப்பான கண்மணி, எப்படி தான் இந்த கொலைகாரனுடன் வீரா இப்படி அன்பை காட்டுகிறாரோ என்று தெரியவில்லை என புலம்புகிறார். அந்த நேரத்தில் கண்மணியின் அத்தை கையில் எண்ணெய் கிண்ணத்தை எடுத்து வந்து கண்மணி இடம் கொடுக்கிறார்.

நீயும் உன் கணவருக்கு இப்படி செய்து பாசமாக இருப்பது போல் உன் மாமனார் மனதில் இடம் பிடிக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த வீட்டில் உன்னுடைய ராஜ்ஜியம் நடக்கும். சாவிக்கொத்தும் உன் கைக்கு வந்து விடும் நாம் நினைத்தபடி எல்லா விஷயமும் நடக்கும் என்று கண்மணிக்கு தூபம் போடுகிறார்.

உடனே கண்மணியும் கணவரை கூட்டிட்டு வந்து எண்ணெய் தேய்த்து குளிப்பாட்ட தயாராகி விட்டார். இதை பார்த்த பிறகு எனக்கு இதுதான் வேண்டும் என்று மனதிற்குள் நினைத்து மாறனையும் பக்கத்தில் உட்கார வைத்து போட்டிக்கு போட்டியாக இருவரும் கணவர்களுக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டுகிறார்கள்.

இதனை தொடர்ந்து மாறனுக்கு எல்லா அசைவ சாப்பாடுகளையும் சமைத்து வீரா பரிமாறுகிறார். இதே மாதிரி நமக்கும் கிடைக்கும் என்று கண்மணி கணவர் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால் கண்மணி, இட்லி சாம்பார் கொடுத்து அவரை ஏமாற்றி விடுகிறார். இப்படி வீராவுக்கு போட்டியாக கண்மணி கணவருடன் அன்பாக இருப்பது போல் டிராமா பண்ணுகிறார்.

அதே மாதிரி கண்மணி மனசை மாற்ற வேண்டும் என்று மாறனிடம் நெருங்கி பழகுவது போல் வீராவும் பிளான் பண்ணி வருகிறார். இதனை அடுத்து மாறனின் அத்தை, ராமச்சந்திரனிடம் வீட்டிற்கு வந்த இரு மருமகளுக்கும் தாலி பெருக்கு பங்க்ஷன் நடத்த வேண்டும் என்று சொல்கிறார். அதன்படி ராமச்சந்திரனும் சம்மதம் கொடுத்து கோயிலில் எல்லாம் ஏற்படும் பண்ணுவதற்கு அத்தையிடம் சொல்லிவிட்டார்.

ஆனால் இந்த விஷயத்தில் எந்தவித பிரச்சனையும் தடங்கலும் வந்து விடக்கூடாது என்பதற்காக மாறனின் அத்தை வீராவை பார்த்து எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும். இதில் ஏதாவது பிரச்சனை வந்துவிட்டால் அதற்கும் மாறன் தான் காரணம் என்று அண்ணன் ரொம்ப கோபப்படுவார் என்று சொல்கிறார். இதனை மறைந்திருந்து ஒட்டு கேட்ட கண்மணி அப்படி என்றால் தாலி பெருக்கு பங்க்ஷனில் ஏதாவது ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி அதை மாறன் மீது போட வேண்டும் என்று பிளான் பண்ணுகிறார்.

இதனை தொடர்ந்து அத்தை ஏற்பாடு பண்ண போகும் பங்க்ஷனில் கண்மணி ஏதாவது ஒரு மட்டமான வேலையை பார்த்து பிரச்சனையை ஏற்படுத்துவதற்கு தயாராகி விட்டார். ஆனால் வழக்கம் போல் இதில் கண்மணிக்கு ஏமாற்றம்தான் கிடைக்கும் என்பதற்கு மாறன் மற்றும் வீரா ஏதாவது ஒரு டூரிஸ்ட் வைத்து நல்லபடியாக நடத்தி முடித்து விடுவார். கடைசிவரை மாறன் மற்றும் வீராவிடம் கண்மணி தோற்றுக் கொண்டே தான் இருக்கப் போகிறார்.

- Advertisement -

Trending News