செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

வீரா சீரியலில் மாறனை பற்றி தெரியாததால் விபரீதமாக முடிவெடுத்த வீரா.. உண்மையை சொல்லப் போகும் தங்கை

Veera Serial: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் வீரா சீரியலில், கண்மணியின் வாழ்க்கையை சீராக்க வேண்டும் என்று நினைத்த வீரா தனக்கு பிடிக்காத வாழ்க்கை என்று தெரிந்தும் அக்காவுக்காக மாறனுடன் வாழ சம்மதித்து புகுந்த வீட்டுக்கு வந்தார். வந்த இடத்தில் பல விஷயங்கள் மூலம் கண்மணிக்கு நல்லதை தெரிவிக்கும் விதமாக வீரா, மாறனை பகடைக்காயாக பயன்படுத்தினார்.

ஆனால் மாறனின் அன்பு உண்மையானது என்பதால் வீரா ஆசைப்பட்ட கனவுகளை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக மேற்கொண்டு வீராவை படிக்க வைக்க முயற்சி எடுக்கிறார். ஆனால் வீராவுக்கு மாறன் பண்ணுவது பிடிக்காததால் மாறனை கோபமாக திட்டி விடுகிறார். இதனை பார்த்த வீராவின் தங்கை, மாறன் மாமாவுடைய ஆசையை கொஞ்சம் கூட நீ யோசித்து பார்க்கவில்லை.

உன்னுடைய சுயநலத்திற்காக மாமாவை கஷ்டப்படுத்துகிறாய் என்று சொன்னதும் வீராவுக்கு புரிந்து விட்டது. அதாவது தன்னுடைய அக்காவின் வாழ்க்கையை சரி பண்ண வேண்டும் என்று நினைத்து மாறனின் ஆசையை அதிகரிக்கும் விதமாக நான் நடந்து கொண்டது தவறுதான் என்று மாறனின் அம்மா சமாதியில் இருந்து பீல் பண்ணி பேசுகிறார்.

அத்துடன் இதற்கு உடனே முடிவு கட்ட வேண்டும் என்பதற்காக மாறனை கூட்டிட்டு லாயர் ஆபீஸ்க்கு போகிறார். அங்கே போனதும் வீரா, மாறனிடம் விவாகரத்து பண்ணிக் கொள்ளலாம். நான் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் இதில் எதுவும் சொல்லாமல் கையெழுத்து போட்டு கொடு என்று சொல்கிறார். இப்படி கேட்டதும் மாறனாலும் எதுவும் சொல்ல முடியாதுதால் வீரா கேட்டபடி கையெழுத்து போட்டு விடுவார்.

ஆனால் இந்த விஷயங்கள் எல்லாம் தெரிந்த பின்பு வீராவின் தங்கை மாறன் மீது எந்த தவறும் இல்லை என்ற விஷயத்தை சொல்லி அண்ணன் விபத்துக்கு காரணம் மாறன் மாமா இல்ல, கண்மணி அக்காவின் வீட்டுக்காரர் தான் என்ற எல்லா உண்மையும் போட்டு உடைக்க போகிறார். அதன் பிறகு வீரா செய்த தவறுகள் எல்லாத்தையும் புரிந்து கொண்டு மாறனுடன் சந்தோஷமாக வாழும் விதமாக புகுந்த வீட்டிற்கு சென்று கண்மணியின் வாழ்க்கையும் சரி செய்து காட்டுவார்.

- Advertisement -

Trending News