திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024

வருமா வராதா.. நடிப்பு அசுரனுக்கு தொடர்ந்து நடக்கும் 7 அரை.. மீண்டும் வந்த புதிய சிக்கல்

விக்ரம் நடிப்பில் கடைசியாக தங்கலான் எனும் திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. விக்ரம், பார்வதி நடிப்பில் மிரட்டி எடுத்திருந்தாலும், தேவை இல்லாத ஒரு சிலவற்றை பா. ரஞ்சித் வைக்க, அதுவே ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜாதியை வெளிப்படையாக பேசாமல், சூசகமாக, வாழை, லப்பர் பந்து போன்ற படங்களில் கூறியிருக்கிறார்கள். அதை மக்கள் ஆதரிக்க தான் செய்கிறார்கள். ஆனால் வசனம் மூலமாக அரைத்த மாவையே ப.ரஞ்சித் சில நேரங்களில் அரைப்பது போல மக்களுக்கு தோன்ற, அவர்களை படத்திற்கு முழு ஆதரவு தெரிவிக்கவில்லை. மேலும் விமர்சனம் கலவையாக இருந்தாலும், வசூல் ரீதியாக தங்களால் படம் வெற்றிபெறவில்லை.

வீர தீர சூரன் வருமா வராதா

தங்களான் படம் நிச்சயம் ஜெயித்து விடும் என்று confident ஆக இருந்த விக்ரமுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதே சமயம் நடிகர் விக்ரம், சித்தா படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். மேலும் எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, சித்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இரண்டு பாகங்களாக உருவாகும் வீர தீர சூரன் பாகம் 2 படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்டு மதுரை, தென்காசி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் முதல் பாகத்தின் ரிலீஸில் ஒரு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. என்ன தான் விக்ரம் தனது 100 சதவீத உழைப்பை போட்டாலும் ஏதாவது ஒரு சிக்கல் ஏழரையாக வந்து கொண்டிருக்கிறது. ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் 2025 ஜனவரி 10ஆம் தேதி திரைக்கு வருகின்ற காரணத்தால் பல படங்களின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி வீர தீர சூரன் படத்தின் ரிலீஸ் தேதியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.வீர தீர சூரன் வருமா வராதா

அதுமட்டுமில்லாமல் எஸ். ஜே. சூர்யா தொடர்பான காட்சிகள் இன்னும் படமாக்கப்பட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தெலுங்கு இண்டஸ்ட்ரியில் எல்லாம், அவர்கள் படத்திற்கு தான் முன்னுரிமை கொடுப்பார்கள். ஆனால் இங்கே மட்டும் தான் இப்படி.. என்ன சொல்வதென்று தெரியவில்லை.

- Advertisement -

Trending News