தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் வேதிகா. இவரது நடிப்பில், பாலாவின் இயக்கத்தில் வெளியான ‘பரதேசி’ திரைப்படம் இந்திய அளவில் பேசப்பட்டது.
அதுமட்டுமில்லாமல், வேதிகா ‘தி பாடி’ என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானதோடு, ரொமான்ஸில் அனைவரையும் மிரளவிட்டிருந்தார்.
இந்த நிலையில் தற்போது வேதிகாவின் ஜிம் வொர்க் அவுட் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.
அதாவது தற்போதுள்ள நடிகர், நடிகைகளுக்கெல்லாம் பாடியை மெய்டன் செய்வது முதற்கண் பணியாகிவிட்டது.அதிலும் குறிப்பாக நடிகர் என்றால் சிக்ஸ் பேக், நடிகை என்றால் ஒல்லியான உடலமைப்பு என்பது தற்போதைய ஃபேஷனாக திகழ்ந்து வருகிறது.
அந்த வகையில் நடிகை வேதிகா தனது 33 வயதிலும் பிட்னஸ் ப்ரீக்காக இருந்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களையும் அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார் வேதிகா.
தற்போது வேதிகா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில், தான் வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர், ‘ஏற்கனவே ஒல்லியா தானே இருக்கீங்க, இன்னும் ஒல்லியான நல்லா இருக்காதே!’ என்று பதறுகின்றனராம்.