Tamil Cinema News | சினிமா செய்திகள்
16 வயதிலேயே திருமணமான பெண்ணாக நடித்தேன்.! காஞ்சனா 3 பட நடிகை ஒப்பன் டாக்.!
நடிகை வேதிகா முனி படத்தில் அறிமுகமான போது என் வயது பதினாறு என கூறியுள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் பிறந்த வேதிகா தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் மதராசி எனும் படத்தின் மூலம் அறிமுகமானார்.
ஆனால் சக்கரகட்டி, மலைமலை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். முனி படத்தில் நடித்ததன் மூலம் தான் இவர் நன்கு பிரபலம் அடைந்தார். அதன் பிறகு இவர் கன்னடம், மலையாளம் என மற்ற மொழி படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
13 வருடங்கள் கழித்து காஞ்சனா படத்தின் மூன்றாவது பாகத்தில் தற்போது நடித்துள்ளார். ஆனால் ரசிகர்கள் முனி படத்தில் 16 வயதில் திருமணமான பெண்ணாக எப்படி கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார் என பாராட்டி வருகின்றனர்.
