Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஜிம் ஒர்க் அவுட் விடியோவை வெளியிட்ட வேதிகா !
Published on

நடிகை வேதிகா தமிழில் அர்ஜுனின் மதராசி படத்தின் மூலம் தான் அறிமுகமானார் . அதன் பின்பு ராகவலாரன்ஸ்க்கு ஜோடியாக முனி படத்திலும், சிலம்பரசனுடன் காளை, ஷாந்தனுவின் சக்கரக்கட்டி படத்திலும் நடித்து பிரபலமானார். எனினும் பாலாவின் பரதேசி படம் தான் இவருக்கு நல்ல பிரேக் த்ரூ கொடுத்தது. தமிழ்,கன்னடம்,தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்து வருபவர் , விரைவில் ஹிந்தியிலும் அறிமுகமாகிறார். அழகு, நடனம் என்று அசத்துபவர்.
