Connect with us
Cinemapettai

Cinemapettai

ajith-vedhalam

Videos | வீடியோக்கள்

ரக்ஷா பந்தனுக்கு வெளிவந்த வேதாளம் தெலுங்கு டீசர்.. பாசத்தில் லட்சுமிமேனனை மிஞ்சிய கீர்த்தி சுரேஷ்

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த படம் தான் வேதாளம். அண்ணன் – தங்கை பாசத்தை மையமாகக்கொண்டு வெளியான இப்படத்தில் அஜித்தின் தங்கையாக லட்சுமி மேனன் நடித்திருந்தார்.

முதன்முறையாக இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். அனிருத் இசையில் அனைத்து பாடல்களுக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்தது. குறிப்பாக ‘ஆளுமா டோலுமா’ பாடல் பட்டி தொட்டியெங்கும் வரவேற்பை பெற்றது.

சமீபத்தில்கூட தெலுங்கு சினிமா பிரபலங்கள் அனைவரும் இப்பாடலுக்கு நடனமாடியது குறிப்பிடத்தக்கது. இப்படம் தற்போது தெலுங்கில் ‘போலா ஷங்கர்’ என்ற பெயரில் ரீமேக்காகிறது. இதில் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நாயகனாகவும், கீர்த்தி சுரேஷ் அவரது தங்கையாகவும் நடிக்கின்றனர்.

மெஹர் ரமேஷ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. அணில் சங்கரா என்பவர் இப்படத்தை தயாரித்து வருகிறார். ரக்சா பந்தன் மற்றும் சிரஞ்சீவியின் 66வது பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அண்ணன் – தங்கை பாசத்தை மையமாகக்கொண்டு உருவாகுவதால், டீசரில் கீர்த்தி சுரேஷ் சிரஞ்சீவிக்கு ராக்கி கட்டிவிடுவதாகவும், சிரஞ்சீவி கீர்த்திக்கு லட்டு ஊட்டிவிடுவது போலவும் டீசரை உருவாக்கியுள்ளனர். இந்த டீசருக்கு லைக்கும் கமெண்டும் குவிந்து வருகிறது.

இப்படத்தின் நாயகி யார் என்பது பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. முன்னதாக சிரஞ்சீவி விஜய் நடித்த ‘கத்தி’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top