முன்னணி ஹீரோக்கள் நடித்து எப்போதோ வெளிவந்த படங்களின் ரிலீஸ் தேதியை நினைவுபடுத்தும்வகையில் அந்த தேதியை கொண்டாட்டமாக்கி வருகின்றனர் ரசிகர்கள். அஜித் நடித்த மங்காத்தா, விஜய் நடித்த சிவகாசி படங்கள் வெளியான தேதிகளை ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடுகின்றனர். அதாவது சமூகவலைத்தளங்களில் குறிப்பிட்ட அந்த தேதிகளை டிரெண்டிங்கில் கொண்டு வருகின்றனர்.

இந்த போக்கு இப்போது அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளது. அஜித் நடித்த வேதாளம் கடந்த வருட தீபாவளியையொட்டி நவம்பவர் 10 -ஆம் தேதி வெளியானது. விமர்சன ரீதியாக மாறுபட்ட கருத்தை சந்தித்த வேதாளம் படம் வசூலை குவித்தது. இப்படம் வெளியாகி வருகிற 10ஆம் தேதி ஒரு ஆண்டு நிறைவு பெறுகிறது.

இதை கொண்டாடும்விதமாக அஜித் ரசிகர்களுக்காக வேதாளம் படத்தை இம்மாதம் 10 -ஆம் தேதி சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்களில் திரையிடப்படுகிறது. இந்த தீபாவளியை முன்னிட்டி ரஜினிகாந்தின், விஜய்யின் தெறி அமீர் இயக்கிய பருத்தி வீரன் ஆகிய படங்கள் சில தியேட்டர்களில் மீண்டும் திரையிடப்பட்டது. அந்த வரிசையில் இப்போது அஜித்தின் வேதாளம் படமும் மறு வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது. சிவா இயக்கிய இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார். அனிருத் இசை அமைத்திருக்கிறார்.