தியேட்டர்ல மிஸ் பண்ணா என்ன, ஓடிடிக்கு வரும் வாழை.. எப்போது தெரியுமா.?

Vazhai : மாரி செல்வராஜின் கனவு படமான வாழை பலதரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. கலையரசன், நிகிலா விமல் ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். கடந்த மாதம் இந்த படம் வெளியான நிலையில் இயக்குனர்கள், திரை பிரபலங்கள் பலரும் இப்படத்தை பாராட்டி இருந்தனர்.

பொதுவாக படங்கள் திரையரங்குகளில் வெளியான ஒரு மாதத்திற்கு பிறகு ஓடிடியில் வெளியாவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் வாழை படத்தை தியேட்டரில் தவற விட்டவர்கள் இன்னும் சில நாட்கள் காத்திருந்தால் ஓடிடியில் பார்க்கலாம்.

வித்யாசமான முயற்சி கையாளக்கூடியவர்தான் மாரி செல்வராஜ். தன்னுடைய மக்களுக்காக தொடர்ந்து போராடி படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் இவரின் படங்கள் வசூல் ரீதியாகவும் ஒரு நல்ல லாபத்தை தான் கொடுத்து வருகிறது.

வாழை படம் ஓடிடி ரிலீஸ் தேதி

உதயநிதி, வடிவேலு காம்போவில் இவர் இயக்கிய மாமன்னன் வெற்றியைத் தொடர்ந்து வாழை படமும் வரவேற்பை பெற்றது. இந்த படம் கிட்டத்தட்ட 50 கோடியை தாண்டி வசூல் மழையில் நனைந்தது. இப்போது தியேட்டரில் விஜய்யின் கோட் படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஆனாலும் சில தியேட்டரில் வாழை படம் ஓடிக் கொண்டிருக்கிறது. ‌ இந்நிலையில் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வருகின்ற செப்டம்பர் 20ஆம் தேதி வாழை படம் ஸ்ட்ரீமிங் செய்யப்பட இருக்கிறது. தியேட்டரை போல ஓடிடியிலும் இப்படத்திற்கு அமோக வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கிராமிய மனம் மாறாத வாழை படம் போல் நிறைய படங்கள் தமிழ் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். குறிப்பாக இந்த படத்தில் குழந்தை நட்சத்திரங்களின் நடிப்புக்கு கண்டிப்பாக விருது கொடுக்க வேண்டும் என்றும் பல பிரபலங்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஓடிடியில் வரும் வாழை

- Advertisement -spot_img

Trending News