புத்திசாலித்தனமாக வெளியிட்ட சிபிராஜ், ஆண்ட்ரியாவின் வட்டம் பட விமர்சனம்.. வொர்த்தா இல்லையா.?

கமலக்கண்ணன் இயக்கத்தில் டிஸ்னி ஹாட் ஸ்டார் தளத்தில் ரிலீஸ் ஆகியுள்ள படம் வட்டம். சிபிராஜ், அதுல்யா, ஆண்ட்ரியா, வம்சி நடிப்பில் ரெடியாகி உள்ள படம்.

கதை: ஐடி துறையில் வேலை பறிபோனதும் பழி தீர்க்க துணி மில் உரிமையாளர் பையனை கடத்துகின்றனர் சிலர். மறுபுறம் காதல் தோல்வியில் போதையில் சுற்றி வரும் சிபிராஜ் தொழில் அதிபர் வம்சியை துப்பாக்கி முனையில் கடத்துகிறார்.

பணம் கிடைக்கும் வரை வம்சி மனைவி ஆண்ட்ரியாவை தனது கஸ்டடியில் எடுக்கிறார் சிபி. சிபிராஜ் தனது காதல் பற்றி ஆண்ட்ரியாவிடம் பகிர்கிறார், பெண்களின் நிலை பற்றி சிபிக்கு புரியவைக்கிறார் ஆண்ட்ரியா. இறுதியில் சிபிராஜின் நோக்கம் என்ன, சிறுவனை கடத்திய ஐ டி ஊழியர்கள் என்ன ஆனார்கள் என்பது மீதி கதை.

சினிமாபேட்டை அலசல்: லோ பட்ஜெட் படம். பெரிதும் ஆர்ப்பாட்டமான காட்சிகள் இல்லாமல் நிறுத்தி நிதானமாக செல்லும் திரைக்கதை. படத்தின்  ஆரம்பம் நமக்கு சஸ்பென்ஸ் ஏற்படுத்துகிறது, பிறகு அப்படியே தொய்வாகி விடுகிறது. தயாரிப்பாளர்கள் புத்திசாலித்தனமாக ஓ டி டி ரிலீஸ் சென்று விட்டனர்.

ஒன்றும் பெரிதாக வீகென்ட் வேலை இல்லையெனில் இப்படத்தை உங்கள் போனில் ஹாயாக டைம் பாஸ் ஆக பார்க்கலாம். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்க்கும் பட்சத்தில் ஓகே வகையறா இப்படம்.

சினிமாபேட்டை ரேட்டிங் 2.25/5

சில நாட்களுக்கு முன்பு சிபிராஜின் மயொன் திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதுமட்டுமில்லாமல் அந்த படத்தின் 2ம் பாகம் எடுக்கலாம் என்று முடிவெடுத்துள்ளனர். இந்த சூழ்நிலையில் இப்படி ஒரு படமா என்று ரசிகர்கள் குழம்பிப் போயுள்ளனர்.