பாகுபலி படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்கிறோம். சத்யாராஜ் வருத்தம் தெரிவித்ததற்கு மட்டும் அல்ல, அந்த படத்தில் பணியாற்றியுள்ள கன்னடர்களும் பாதிக்கப்டுவார்கள் என்றே படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்கிறோம்.

மேலும், தமிழ்நாட்டில் கன்னட படங்களுக்கு தடை விதிப்பதாக சில தகவல்கள் வந்துள்ளன. அது மட்டும் உண்மைஎன்றால் தமிழ் படங்கள் இனி கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய அனுமதிக்க மாட்டோம். என்று வட்டாள் நாகராஜ் கூறியுள்ளா(ன்)ர்.

ஒரு திரைப்படத்தை ஒரு குறிப்பிட்ட அமைப்பு, அல்லது குழு சில்லறைத்தனமான போராட்டம் நடத்தி தடை செய்யும் அளவுக்கு இருக்கிறது நம்முடைய அரசியல் சட்டம்.