வசுந்தரா தாஸ் தமிழ் பிராமண குடும்பத்தில் பெங்களூரில் பிறந்தவர். சிறு வயதிலேயே தன் பாட்டியிடம் ஹிந்துஸ்தானி இசை கற்க ஆரம்பித்தவர். தன் பள்ளி, காலேஜ் படிப்புகள் அனைத்தும் பெங்களூரில் படித்தவர். படிக்கும் பொழுதே காலேஜ் இசைக்குழுவில் இருந்தவர். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், ஸ்பானிஷ் என பல மொழிகளில் பேசும் திறன் கொண்டவர்.

வசுந்தராவின் சினிமா அறிமுகம் தமிழில் கமலின் ஹே ராம் மூலமாக நிகழ்ந்தது. மைதிலி ஐயங்கார் வேடத்தில் கலக்கி இருப்பார் அவர். பின்னர் தல அஜித்துடன் சிட்டிசன் படத்தில் நடித்தார். நடிகை ஆன பின் கூட இவருக்கு இசை மீது தான் அதீத காதல் இருந்தது. மேலும் இவர் தமிழ், ஹிந்தி, மலையலாம், கன்னட படங்களில் நடித்துள்ளார். 2007ல் ஹிந்தியில் வெளியான ‘ஏக் தாஸ்த்க்’ என்பது தான் நடிகையாக இவரின் கடைசி படம்.

முதல்வன் படத்தில் ரஹ்மான் இசையில் இவர் பாடிய சக்கலக்க பேபி இவருக்கு இசையுலகில் நல்ல பெயரையும் பல விருதுகளையும் பெற்று தந்தது.

Look who I’m with… @lagori #Mangalore

A post shared by vasundharadas (@vasundharadas) on


தற்பொழுது 40 வயதாகும் வசுந்தரா தன் கணவர் ராபர்டோ நரேன் உடன் பெங்களுருவில் வசித்து வருகிறார். இவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தாலும் தன் இசை ஆர்வத்தை விட்டு விட வில்லை. இண்டிபென்டென்ட் இசை, ஆல்பம் என்று இசை துறையில் பிஸியாகவே இருந்து வருகிறார்.

வி சானல், பிபிசி போன்ற நிறுவனகளுக்கு சில ப்ராஜெக்ட் செய்து கொடுத்துள்ளார். மேலும் இவர் “தி ஆக்ட்டிவ்” என்ற பெயரில் பெங்களுருவில் ஸ்டூடியோ ஒன்றை நிறுவியுள்ளார்.

பாடல் எழுதுவது, இசை அமைப்பது, இசை நிகழ்ச்சி நடத்துவது, பிசினஸ் என்று பிஸியாக உள்ளார் இவர்.
https://twitter.com/thevasundhara?lang=en
நடிகைகள் எல்லாம் வயது முதிர்ந்த பின் அக்கா, அம்மா வேடம், சீரியல் என்று ஒதுங்கும் இந்த கால கட்டத்தில் தன் பாஷன் இசை பின் சென்று வெற்றியும் கண்டுள்ளார். தமிழ் , தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார். வசுந்த்ராவுக்கு சினிமா பேட்டை சார்பில் ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.

அதிகம் படித்தவை:  சுவாதி கொலை வழக்கு படக்குழுவிற்கு விஷால் சரமாரி கேள்வி...