Tamil Nadu | தமிழ் நாடு
மளிகை கடையில் இருந்து மாளிகைக்கு உயர்ந்த வந்தக்குமார்.. இறந்ததுக்கு காரணம் கொரோனா இல்லையாம்!
வசந்த் அண்ட் கோ என்ற நிறுவனத்தின் சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் வசந்தக்குமார் நேற்று கொரோனா பாதிப்பால் காலமானார். கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் தமிழக மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
கிட்டத்தட்ட 40 வருடங்களாக தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொண்டு, தற்போது 82 கிளைகளை, மூன்று மாநிலங்களில் வைத்திருந்தவர் வசந்தகுமார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று தனது உயிரை கூட பொருட்படுத்தாமல் உதவிகளைச் செய்து வந்துள்ளார், ஒரு சூழ்நிலையில் அவருக்கும் கொரோனா தாக்கியுள்ளது.
ஆனால் கொரோனாவின் பாதிப்பு மட்டும் இல்லாமல், உடல் ரீதியாக ஒரு சில பிரச்சினைகள் இருந்ததால் மட்டுமே அவரை காப்பாற்ற முடியவில்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தும் விதமாக வசந்தகுமாரின் உடலை வைத்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடலை, உடனடியாக இறுதி சடங்கை முடித்து விடுவது தான் முறை, அதுமட்டுமில்லாமல் வசந்தகுமாரின் மகன் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது தந்தை கொரோனாவால் உயிர் இழக்கவில்லை என்பதையும் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் ஒரு தூண் தமிழகத்தில் சாய்ந்துவிட்டது என்று அரசியல் பிரமுகர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கன்னியாகுமரி எம்.பியாக தேர்வு செய்யப்பட்ட வசந்தகுமார் காங்கிரஸின் கொள்கைகளை பின்பற்றி மக்களுக்கு ஒரு சேவகனாக வாழ்ந்து வந்தவர்.
தி நகரில் உள்ள அவரது வீட்டில், ஊழியர்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவிப்பதற்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. உழைப்பால் உயர்ந்த உன்னத மனிதனை தமிழகம் இன்று இறந்து விட்டது. அவரது ஆத்மா சாந்தி அடைவதற்கு நாம் பிரார்த்தனை செய்து கொள்வோம்.
